வீடு / சமையல் குறிப்பு / மதுரை ஸ்பெஷல் தக்காளி சட்னி

Photo of Madurai special tomato satni by Lalitha Ananth at BetterButter
894
0
0.0(0)
0

மதுரை ஸ்பெஷல் தக்காளி சட்னி

Jan-29-2019
Lalitha Ananth
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மதுரை ஸ்பெஷல் தக்காளி சட்னி செய்முறை பற்றி

இட்லி தோசை வெண்பொங்கல் எல்லாத்துக்கும் இந்த சட்னி நல்லா இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெங்காயம்-2
  2. தக்காளி 5
  3. இஞ்சி 4 துண்டு
  4. பூண்டு 5
  5. மிளகாய் வத்தல் 3
  6. உளுந்தம் பருப்பு 3 ஸ்பூன்
  7. புதினா ஒரு கப்
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. கடுகு உளுந்தம் பருப்பு தேவையான அளவு
  10. கறிவேப்பிலை தேவையான அளவு
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பை சேர்க்கவும்
  2. உளுந்தம்பருப்பு பொன்னிறமானவுடன் வெங்காயம் பூண்டு இஞ்சி மிளகாய் வத்தல் சேர்க்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்க்கவும்
  5. தக்காளி வதங்கும் வரை வதக்கவும்
  6. தக்காளி வதங்கியவுடன் உப்பு புதினா சேர்க்கவும்
  7. புதினா தக்காளி நன்கு வதங்கியவுடன் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
  8. அரைத்தவுடன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  9. சுவையான மதுரை ஸ்பெஷல் தக்காளி சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்