வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை சக்கரை பொங்கல்

Photo of Broken wheat sakkarai pongal by Priya Tharshini at BetterButter
582
1
0.0(0)
0

கோதுமை ரவை சக்கரை பொங்கல்

Jan-30-2019
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை சக்கரை பொங்கல் செய்முறை பற்றி

அரிசிக்கு பதில் கோதுமை ரவையை பாசிபருப்புடன் சேர்த்து செய்யப்படும் சக்கரைபொங்கல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை ரவை - 1/2 கப்
  2. வெல்லம் - 3/4 கப்
  3. பாசிபருப்பு - 2 மேசைக்கரண்டி
  4. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  5. முந்திரி - 1 தேக்கரண்டி
  6. திராட்சை - 1 தேக்கரண்டி
  7. நெய் - 3 மேசைக்கரண்டி
  8. தண்ணீர் - 3 கப்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை 1/4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  2. 2 மேசைக்கரண்டி நெய்யை சூடாக்கி முந்திரி திராட்சை வருத்து எடுக்கவும்.
  3. அதே நெய்யில் கோதுமை ரவை சேர்த்து வருக்கவும்.
  4. பாத்திரத்தில் 21/2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  5. அதில் ரவை சேர்த்து வேகவிடவும்.
  6. பாசிப்பருப்பை அத்துடன் சேர்க்கவும்.
  7. மூடிபோட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
  8. வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  9. வெந்த ரவையுடன் வெல்லம் கரைத்ததை சேர்க்கவும்.
  10. வெல்லம் சேர்ந்ததும் ஏலக்காய் தூள்,வருத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்.
  11. மீதம் உள்ள நெய் சேர்த்து கலக்கவும்.
  12. கோதுமை ரவை சக்கரை பொங்கல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்