வீடு / சமையல் குறிப்பு / உளுந்தங்களி

Photo of Ulunthankali by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
452
1
0.0(0)
0

உளுந்தங்களி

Jan-30-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்தங்களி செய்முறை பற்றி

ரொம்ப ரொம்ப சத்தானது முக்கியமாக வளரும் பெண்பிள்ளைகளுக்கு நல்லது சூடாக சாப்பிட சுவையாகயிருக்கும் இதோடு சேர்ந்த நல்லெண்ணை கருப்பட்டி இடுப்பு எலும்பு பலம்சேர்ப்பது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாவு 2கப்
  2. நல்லெண்ணைய் 50 Ml
  3. கருப்பட்டி 1/4கி
  4. உப்பு
  5. தண்ணீர் 6கப்
  6. மாவுக்கு கருப்பு முழு உளுந்து1/2கி பச்சரிசி 1கி

வழிமுறைகள்

  1. உளுந்தை வெறும் சட்டியில் வாசனை வரும்வரை வறுத்து அரிசியுடன் சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்
  2. அந்தமாவு 2 கப் எடுத்து 6கப் தண்ணீரில் உப்பு போட்டு கரைத்து அடுப்பில் வைத்து கெட்டி படாமல் துடுப்பு வைத்து கெட்டியாக கிண்டவும்
  3. கைவலிக்கதான் செய்யும் நன்கு இழுத்து கிண்டவும்
  4. வெந்தது தெரிய கையில் தொட்டு பார்த்தால் மாவு கையில் ஒட்டகூடாது
  5. அதை தட்டில் குவித்துவைத்து கரண்டியின் பின்னால் அழுத்தினால் குழிபோல் வரும் அதில் கருப்பட்டியை துருவி போட்டு சுத்தமான நல்லெண்ணைய் விட்டு சூடாக சாப்பிடனும்
  6. வயசுக்கு வந்த பெண்களுக்கு கட்டாயம் கொடுக்கவேண்டிய ஆரோக்கிய உணவு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்