வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பாசி பயிறு தோரன்

Photo of Sprouted Moongdal Thoran by Priya Suresh at BetterButter
374
0
0.0(0)
0

முளைக்கட்டிய பாசி பயிறு தோரன்

Jan-30-2019
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பாசி பயிறு தோரன் செய்முறை பற்றி

புரத சத்து மிக்க கேரளா ஸ்டைலில் செய்த முளைகட்டிய பாசிப்பயறு தோரன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 கப் முளைகட்டிய பாசிப்பயறு
  2. 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  3. கறிவேப்பிலை தேவைக்கு
  4. 1/2 டீஸ்பூன் கடுகு
  5. 1/2டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  6. உப்பு தேவைக்கு
  7. எண்ணெய் தேவைக்கு
  8. அரைக்க:
  9. 1/4 கப் தேங்காய் துருவல்
  10. 4 பல் பூண்டு
  11. 1 டீஸ்பூன் சீரகம்
  12. 3 பச்சை மிளகாய்

வழிமுறைகள்

  1. முளைகட்டிய பாசிப்பயறு குக்கரில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் தேவையான எண்ணெயை சூடாக்கவும்
  4. கடுகு ,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்
  5. வேகவைத்த முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து வதக்கவும்
  6. அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி விட்டு சிறு தீயில் அடுப்பை விட்டு வேக விடவும்
  7. அரைத்த விழுதில் பச்சை வாசனை போனதும் அடுப்பை நிறுத்தவும்
  8. கேரளா ஸ்டைல் முளைகட்டிய பாசிப்பயறு தோரன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்