வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு உருண்டை

Photo of Sathtu mau urundai by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
4
1
0.0(0)
0

சத்துமாவு உருண்டை

Jan-31-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு உருண்டை செய்முறை பற்றி

சிறுபிள்ளையில் பால்வாடியில் கொடுப்பாங்க அவ்வளவு சுவையாக இருக்கும் போட்டிபோட்டு வாங்கி சாப்பிடுவோம் இப்போது அதையே வீட்டில் செய்து கொடுக்ன்றேன் நீங்களூம் செய்து சாப்பிடுங்கள்

செய்முறை டாக்ஸ்

 • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
 • முட்டை இல்லா
 • மீடியம்
 • தமிழ்நாடு
 • பான் பிரை
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. கம்பு 1/4கி
 2. பொட்டுக்கடலை 50கிராம்
 3. கேழ்வரகு 100கிராம்
 4. அரிசி 100கிராம்
 5. நிலக்கடலை 50கிராம்
 6. நாட்டுச்சர்க்கரை1/4கிலோ
 7. ஏலக்காய் 5
 8. முந்திரி10

வழிமுறைகள்

 1. கம்பு கேழ்வரகு அரிசி யை கழுவி வெயிலில் நன்கு காயவைக்கவும்
 2. காய்ந்ததும் கம்பு கேழ்வரகு அரிசியை தனித்தனியாக வறுக்கவும் வறுக்கும்போது நன்கு பொறிந்து வரும் நிலக்கடலை வறுத்தது என்றால் அப்படியே சேர்க்கவும் பொட்டு கடலையையும் போடவும்
 3. ஏலக்காய் முந்திரி யையும் வறுத்து வைக்கவும்
 4. எல்லாம் நன்கு ஆறியதும் மாவாக திரித்துக்கொள்ளவும்
 5. அரைத்தல் என்பது நைசாக அரைப்பது திரித்தல் என்பது நெறுநெறுபோல் இருப்பது
 6. சர்க்கரை கலந்து வைக்கவும் சிறிது உப்பை வறுத்து சேர்த்தால் மாவில் பூச்சி வண்டுவராது
 7. தேவைப்படும்போது தண்ணீரை கொதிக்கவைத்து கெட்டியாக உருண்டை பிடித்து சாப்பிடவும்
 8. உஉடலுக்கு வலுசேர்க்கும் காலையில் உணவாகவே எடுத்துக்கொள்ளலாம் மாவுசத்து கால்சியம் நல்ல கொழுப்பு நிறைந்தது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்