வீடு / சமையல் குறிப்பு / " பூண்டு சாதம் "
" பூண்டு சாதம் " தேவையான பொருட்கள் வடித்த சாதம் - 2 கப் ( சாதம் உதிரியாக இருக்க வேண்டும்) வெங்காயம் -2 ( சின்னதாக நறுக்கியது ) கறிவேப்பிலை - சிறிதளவு வற்றல் மிளகு - 3 கடுகு - 1 டீஸ்பூண் உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூண் பூண்டு - 10 எண்ணம் ( தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.) நல்ல மிளகு - 1/4 டீஸ்பூண் ( தட்டி வைத்துக்கொள்ளவும் ) நல்லெண்ணை - 4 டேபிள் ஸ்பூண் செய்முறை கடாய் அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூண் நல்லெண்ணை விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வற்றல் மிளகு சேர்த்து வதக்கவும். தேவையான உப்பும், தட்டி வைத்திருக்கும் நல்ல மிளகும் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அடைக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணவும். சுவையான பூண்டு சாதம் ரெடி.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க