பிரண்டை ரசம் | PIRANDAI RASAM in Tamil

எழுதியவர் SUYAMBAGI ARAVIND  |  1st Feb 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • PIRANDAI RASAM recipe in Tamil,பிரண்டை ரசம், SUYAMBAGI ARAVIND
பிரண்டை ரசம்SUYAMBAGI ARAVIND
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

0

0

பிரண்டை ரசம் recipe

பிரண்டை ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make PIRANDAI RASAM in Tamil )

 • பிரண்டை 15 கணுக்கள்
 • தக்காளி 1
 • புளிக்கரைசல் சிறிது
 • மிளகு 2 தேக்கரண்டி
 • சீரகம் 1 தேக்கரண்டி
 • பூண்டு 8 பல்
 • காய்ந்த மிளகாய் 5
 • பெருங்காயம் சிறிது
 • வெந்தயம் ஒரு சிட்டிகை
 • உப்பு
 • நெய்
 • மஞ்சள் தூள்

பிரண்டை ரசம் செய்வது எப்படி | How to make PIRANDAI RASAM in Tamil

 1. பிரண்டை கருவேப்பிலை கொத்தமல்லி தழை புளி
 2. மிளகு சீரகம் தக்காளி பூண்டு காய்ந்த மிளகாய் வெந்தயம் பெருங்காயம்
 3. மிளகு சீரகம் வெந்தயம் பூண்டு பெருங்காயம் உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்
 4. இடித்த மசாலாவுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து தக்காளியை பிழிந்து சேர்க்கவும்
 5. புளியுடன் கல் உப்பை சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
 6. வாணலியில் நெய் ஊற்றி பிரண்டையை துண்டுகளாக்கி வதக்கவும்
 7. வதங்கிய பிரண்டையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்
 8. இடித்த பிரண்டை விழுதை ரசக் கரைசலுடன் சேர்த்து மஞ்சள் தூள் மல்லித்தழை கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
 9. பிரண்டை வதக்கிய மீதமான நெய்யில் கடுகு உளுந்து தாளித்து பொரியும்போது ரசக்கரைசலை ஊற்றவும்
 10. ரசம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்
 11. ஆரோக்கியமளிக்கும் பிரண்டை ரசம் தயார்

எனது டிப்:

பிரண்டை வாரம் ஒருமுறை சேர்த்துக்கொண்டால் இதயம் பலப்படும் மூட்டு வலி மூலநோய் அகன்று விடும்

Reviews for PIRANDAI RASAM in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.