வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு களி

Photo of Ragi kali by Priya Tharshini at BetterButter
543
0
0.0(0)
0

கேழ்வரகு களி

Feb-01-2019
Priya Tharshini
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு களி செய்முறை பற்றி

மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சௌத்இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேழ்வரகு மாவு - 1 கப் + 1 மேசைக்கரண்டி
  2. தண்ணீர் - 21/2 கப் + தெளிக்க சிறிது
  3. உப்பு - தேவைக்கு
  4. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் , உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும்.
  2. தண்ணீர் சிறிது சூடு ஆனதும் 1 மேசைக்கரண்டி ராகி மாவை கரைத்துக் கொள்ளவும். மரக்கரண்டியை அதில் போட்டு விடவும்.
  3. தண்ணீர் நன்கு கொதிக்க விடவும்.
  4. அதில் 1 கப் ராகி மாவை சேர்த்து மிதமான சூட்டில் 7 நிமிடம் வேக விடவும்.
  5. 7 நிமிடம் பிறகு அடுப்பை குறைத்து கட்டி இல்லாமல் மாவை கலக்கவும்.
  6. இறுக்கமாக இருந்தால் சிறிது சுடதண்ணீர் தெளித்து களரவும்.
  7. சில நிமிடம் களறியதும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். தண்ணீர் கையால் தொட்டு பாரத்தால் கையில் ஒட்டக் கூடாது.
  8. தண்ணீர் தடவிய தட்டில் சிறிது களியை எடுத்து போடவும்.
  9. கையில் தண்ணீர் தொட்டு உறுண்டைகளாக்கவும். ராகி களி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்