வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பச்சைப்பயறு கேப்பை கம்பு ரொட்டி

Photo of Sprouted green gram Ragi pearl millet roti by Surya Rajan at BetterButter
633
0
0.0(0)
0

முளைக்கட்டிய பச்சைப்பயறு கேப்பை கம்பு ரொட்டி

Feb-01-2019
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பச்சைப்பயறு கேப்பை கம்பு ரொட்டி செய்முறை பற்றி

ஆரோக்கியமான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. கேழ்வரகு ஒரு கப்
  3. கம்பு ஒரு கப்
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கோதுமை மாவு 3 கப்

வழிமுறைகள்

  1. பச்சைப்பயிறு கேப்பை கம்பு ஆகியவற்றை நன்றாக கழுவி 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. 6 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை நன்றாக வடித்து விடவும்
  3. பின் அதனை ஒரு ஹாட் பேக்கில் 12 மணி நேரம் வைத்து மூடி வைக்கவும்
  4. 12 மணி நேரத்திற்குப் பிறகு அவை முளை கட்டி விடும்
  5. பின் அதனை சூரிய ஒளியில் அல்லது ஃபேன் காற்றில் 3 மணி நேரம் காயவிடவும்
  6. மேலும் அதில் இருக்கும் ஈரதன்மையை போக்க குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வறுக்கவும்
  7. பின் அதனை நன்றாக ஆறவிடவும்
  8. பின் அதனை மாவு திரிக்கும் கடையில் கொடுத்து அல்லது வீட்டிலேயே மையாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்
  9. ஒரு கப் கேழ்வரகு மாவிற்கு (கம்பு மாவிற்கு அல்லது பச்சைப்பயிறு மாவிற்கு) ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து கொள்ளவும்
  10. தேவையான உப்பு தண்ணீர் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  11. வட்ட வடிவ சப்பாத்திகளாக உருட்டி சூடான தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்