வீடு / சமையல் குறிப்பு / " அவல் புட்டு "
" அவல் புட்டு " தேவையான பொருட்கள் கட்டியுள்ள அவல் - 1 கப் தேங்காய் - 1/2 கப் தேவைக்கு உப்பு தண்ணீர் - 1/4 கப் செய்முறை 1. மிக்ஸியுடைய ஜாரில் அவலைப் போட்டு தரு தருப்பாக ( ரவை போல்) பொடித்துக் கொள்ளவும். 2. வாயகன்ற ஒரு பாத்திரத்தில் பொடித்த அவலைப் போட்டு தேவைக்கு உப்பும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து, தெளித்து புட்டு மாவு போல விரவிக் கொள்ளவும். 3. புட்டுக் குழலில் முதலில் தேங்காய் வைக்கவும். அடுத்து விரவிய அவல் பொடி சேர்க்கவும். மீண்டும் தேங்காய் வைக்கவும். மீண்டும் அவல் பொடி சேர்க்கவும். அதன் மீது தேங்காய் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும். வெந்ததும் இறக்கவும். சுவையான ஆரோக்கியமான அவல் புட்டு ரெடி."
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க