வீடு / சமையல் குறிப்பு / " ஜீரகக் கஞ்சி "
" ஜீரகக் கஞ்சி " தேவையான பொருட்கள் நறுக்கரிசி - 2 கப் தேங்காய் - 1 கப் ஜீரகம் - 3 டீஸ்பூண் சின்ன வெங்காயம் - 10 எண்ணம் உப்பு தேவைக்கு தாளிக்க - எண்ணை - 3 டீஸ்பூண் கடுகு - 1 டீஸ்பூண் ஜீரகம் - 1 டீஸ்பூண் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை 1. அரிசியை நன்றாகக் கழுவி அடி கனமுள்ள ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 2.ஜீரகம், தேங்காய், உள்ளி மூன்றையும் மிக்ஸி ஜாரில் மை போல அரைத்துக் கொள்ளவும். 3.அரிசி நன்றாக வெந்து குழைந்து வரும் போது அரைத்த அரப்பை சிறிது தண்ணீர் விட்டு கலக்கி கஞ்சியில் சேர்க்கவும். 4.கஞ்சி நன்றாகக் கொதித்து வரும் போது உப்புச் சேர்த்து இறக்கவும். 5. சிறிய சட்டி அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி கடுகு, ஜீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சியில் சேர்க்கவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க