வீடு / சமையல் குறிப்பு / " பழக் கொழுக்கட்டை "

Photo of " Pazha kozhukattai " by Navas Banu L at BetterButter
431
1
0.0(0)
0

" பழக் கொழுக்கட்டை "

Feb-03-2019
Navas Banu L
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

" பழக் கொழுக்கட்டை " செய்முறை பற்றி

பழக் கொழுக்கட்டை நேந்திரம் பழம் - 3 வறுத்த அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூண் ஃபில்லிங் செய்வதற்கு தேங்காய் துருவல் -1 கப் சீனி - 3 டேபிள் ஸ்பூண் உப்பு - ஒரு நுள்ளு ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூண் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10 கிஸ்மிஸ் - 10 செய்முறை நேந்திரம் பழத்தை இரண்டாக வெட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வெந்த பழத்தின் தோலை நீக்கி விட்டு, பழத்தை இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் கறுப்பு விதைகளை நீக்கவும். விதைகள் நீக்கிய பழத்தை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஃபில்லிங் செய்வதற்கு ஒரு பாத்திரம் எடுத்து அதில் தேங்காய் துருவல், சீனி, ஏலக்காய்ப் பொடி, ஒரு நுள்ளு உப்பு, முந்திரிப் பருப்பு,கிஸ்மிஸ் எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும். அரைத்து வைத்திருக்கிற பழத்தில் அரிசி மாவும், ஒரு டேபிள் ஸ்பூண் சீனியும் சேர்த்து நன்றாக குழைத்து வைக்கவும். குழைத்த பழத்திலிருந்து ஒரு உருளை எடுத்து கையில் லேசாக எண்ணையோ அல்லது தண்ணீரோத் தொட்டு இடது உள்ளங்கையில் வைத்து பரத்தி அதன் நடுவில் ஒரு ஸ்பூண் ஃபில்லிங் வைத்து எல்லா பக்கமும் சேர்த்து ஒட்டி கையில் வைத்து நல்ல உருண்டைகளாக்கி ஸ்டீமரில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். மணமும் சுவையும் நிறைந்த உணவு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நேந்திரம் பழம் - 3
  2. வறுத்த அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூண்
  3. ஃபில்லிங் செய்வதற்க்கு
  4. தேங்காய் துருவல் - 1 கப்
  5. சீனி - 3 டேபிள் ஸ்பூண்
  6. உப்பு - ஒரு நுள்ளு
  7. ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூண்
  8. நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10
  9. கிஸ்மிஸ் - 10

வழிமுறைகள்

  1. 1.நேந்திரம் பழத்தை இரண்டாக வெட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  2. 2.வெந்த பழத்தின் தோலை நீக்கி விட்டு, பழத்தை இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் கறுப்பு விதைகளை நீக்கவும்.
  3. 3.விதைகள் நீக்கிய பழத்தை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  4. 4.ஃபில்லிங் செய்வதற்கு
  5. 5.ஒரு பாத்திரம் எடுத்து அதில் தேங்காய் துருவல், சீனி, ஏலக்காய்ப் பொடி, ஒரு நுள்ளு உப்பு, ,முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
  6. 6.அரைத்து வைத்திருக்கிற பழத்தில் அரிசி மாவும் ஒரு டேபிள் ஸ்பூண் சீனியும் சேர்த்து நன்றாக குழைத்து வைக்கவும்.
  7. 7.குழைத்த பழத்திலிருந்து ஒரு உருளை எடுத்து கையில் லேசாக எண்ணையோ அல்லது தண்ணீரோத் தொட்டு இடது உள்ளங்கையில் வைத்து பரத்தி அதன் நடுவில் ஒரு ஸ்பூண் ஃபில்லிங் வைத்து எல்லாப் பக்கமும் சேர்த்து ஒட்டி கையில் வைத்து நல்ல உருண்டைகளாக்கி ஸ்டீமரில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்