வீடு / சமையல் குறிப்பு / " மஸலா ஆம்லெட் "

Photo of "Masala Omelette " by Navas Banu L at BetterButter
406
0
0.0(0)
1

" மஸலா ஆம்லெட் "

Feb-05-2019
Navas Banu L
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

" மஸலா ஆம்லெட் " செய்முறை பற்றி

" மஸலா ஆம்லெட் " தேவையான பொருட்கள் முட்டை - 4 வெங்காயம் -2 தக்காளி - பெரியது -1 பச்சை மிளகு - 3 கேப்ஸிகம் - பகுதி மல்லித்தழை நறுக்கியது - ஒரு பிடி மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண் மிளகு பொடி - 1/2 டீஸ்பூண் கரம் மஸாலா - 1 டீஸ்பூண் உப்பு - தேவைக்கு எண்ணை - 3 டேபிள் ஸ்பூண் செய்முறை வெங்காயம்,பச்சை மிளகு தக்காளி ,கேப்ஸிகம் மூன்றையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் பேன் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூண் எண்ணை விட்டு சூடானதும் நறுக்கி வைத்திருக்கிற வெங்காயம், பச்சைமிளகு, தக்காளி, கேப்ஸிகம் எல்லாவற்றையும் நன்றாக வதக்கி,அதனுடன் மஞ்சள் பொடி, மிளகுபொடி, கரம் மஸாலா பொடி, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி உப்புச் சேர்த்து நன்றாக அடிக்கவும். அதில் வதக்கிய மஸலாவையும், நறுக்கிய மல்லித் தழையையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். பேன் அடுப்பில் வைத்து 2 டீஸ்பூண் எண்ணை விட்டு சூடானதும் அதில் அடித்து வைத்திருக்கிற முட்டை மஸலாவை ஊற்றவும். மீடியம் ஃப்ளேமில் 7 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். வெந்ததும் ஒரு தட்டில் கமழ்த்தி தட்டி வெட்டி எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை - 4
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. பச்சைமிளகு - 3
  5. கேப்ஸிகம் - பகுதி
  6. மல்லித்ழை - ஒரு பிடி
  7. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
  8. மிளகு பொடி - 1/2 டீஸ்பூண்
  9. கரம் மஸாலா - 1 டீஸ்பூண்
  10. எண்ணை - 3 டேபிள் ஸ்பூண்
  11. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1. வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகு, கேப்ஸிகம், மல்லித்தழை இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. 2.ஒரு நான்ஸ்டிக் பேன் அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூண் எண்ணை விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகு, கேப்ஸிக்கம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  3. 3.அதனுடன் மஞ்சள் பொடி, மிளகு பொடி, கரம் மஸலா பொடி, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கிக் வைக்கவும்.
  4. 4.ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி உப்பும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
  5. 5. இதனுடன் வதக்கிய மஸலாவையும்,மல்லித்தழையையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
  6. 6. நான்ஸ்டிக் பேன் அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூண் எண்ணை விட்டு,மிக்ஸ் பண்ணிய முட்டை மஸலாவை ஊற்றி மூடி வைத்து 7 நிமிடம் வேக விடவும்.
  7. 7.வெந்ததும் ஒரு தட்டில் கமழ்த்தி தட்டி வெட்டி எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்