வீடு / சமையல் குறிப்பு / இட்லி சாண்ட்விச்

Photo of Idli Sandwich by Jayasakthi Ekambaram at BetterButter
191
0
0.0(0)
0

இட்லி சாண்ட்விச்

Feb-05-2019
Jayasakthi Ekambaram
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இட்லி சாண்ட்விச் செய்முறை பற்றி

இட்லியை இரண்டாக கட் செய்து உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து செய்யும் சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி அரிசி 4 கப்
  2. உளுந்து ஒரு கப்
  3. உருளைக்கிழங்கு 4
  4. வெங்காயம் ஒன்று
  5. கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
  6. காய்ந்த மிளகாய் ஒன்று
  7. எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  10. தனியா தூள் அரை ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்
  12. கேரட் ஒன்று
  13. கரம் மசாலா அரை ஸ்பூன்
  14. பச்சை மிளகாய் ஒன்று
  15. உப்புத்தூள் தேவையான அளவு
  16. சமையல் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து இரண்டையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைத்து வைக்கவும்
  2. அரிசி உளுந்து மாவை தேவையான அளவு உப்பு தூள் சேர்த்து நன்றாக கலக்கி 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  3. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்
  4. வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்
  5. கேரட்டைத் துருவிக் கொள்ளவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து வெங்காயம் பச்சைமிளகாயை தாளித்து கொள்ளவும்
  7. துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்
  8. காய்கள் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா தூள் உப்பு தூள் சேர்த்து வதக்கவும்
  9. வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும்
  10. பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்
  11. கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி அடுப்பை ஆப் செய்யவும்
  12. கொத்தமல்லி சட்னி செய்வதற்கு:
  13. அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்க்கவும்
  14. உளுத்தம் பருப்பு பொன்னிறமானவுடன் ஒரு காய்ந்த மிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  15. கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதக்கி அதில் உப்பு தூள் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்
  16. மூன்று சிறிய கிண்ணங்கள் எடுத்துக்கொண்டு அதன் உள்ளே எண்ணெய் தடவி இட்லி மாவை அதில் ஊற்றி வாணலியில் தண்ணீர் வைத்து அதன் உள்ளே கிண்ணங்களை வைத்து ஆவியில் வேக வைக்கவும்
  17. இட்லிகள் வெந்த பிறகு தட்டில் எடுத்து வைத்து ஆறிய பிறகு அதனைக் குறுக்கு வாக்கில் இரண்டாக கட் செய்யவும்
  18. இட்லியின் ஒரு பக்கத்தில் கொத்தமல்லி சட்னியை தடவி அதன் மேல் உருளைக்கிழங்கு சப்ஜி வைக்கவும்
  19. இன்னொரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மேலே வைத்து மூடவும்
  20. எல்லா இட்லிகளையும் இதுபோல் செய்த பிறகு ஒரு நாண்ஸ்டிக் வாணலியில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இந்த சாண்ட்விச் கைகளை இரண்டு பக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும்
  21. இரண்டு பக்கமும் சிவக்க வைத்து சாண்ட்விச் களை ஒரு தட்டில் கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்