வீடு / சமையல் குறிப்பு / PEARL MILLET AND FINGER MILLET PUDDING WITH VAL BEANS GRAVY !

Photo of PEARL MILLET AND FINGER MILLET PUDDING WITH VAL BEANS GRAVY ! by Ramani Thiagarajan at BetterButter
464
2
0.0(1)
0

PEARL MILLET AND FINGER MILLET PUDDING WITH VAL BEANS GRAVY !

Feb-05-2019
Ramani Thiagarajan
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகிமாவு- 1 கப்
  2. கம்பு- 1 கப்
  3. மொச்சைக் கொட்டை- 100 கிராம்
  4. நல்லெண்ணெய் -50 கிராம்
  5. கத்தரிக்காய்- 1/4 கிலோ
  6. சிறிய வெங்காயம் 100 கிராம்
  7. கடுகு- 1 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. வறுத்து அரைத்த கொத்துமல்லி விதை விழுது- 2 மேஜைக் கரண்டி
  10. வறுத்து அரைத்த சிகப்பு மிளகாய் விழுது-2 மேஜைக் கரண்டி
  11. மைய அரைத்த தேங்காய் விழுது -4 மேஜைக் கரண்டி
  12. தக்காளி விழுது -2 மேஜைக் கரண்டி
  13. மஞ்சள் தூள் -1 மேஜைக் கரண்டி
  14. புளி- எலுமிச்சைப் பழ அளவு

வழிமுறைகள்

  1. கம்பை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய கம்பை தண்ணீர் வடித்துவிட்டு மிக்ஸியில் லேசாக உடைத்துக் கொள்ளவும்.
  3. 3 மடங்கு தண்ணீரும் 2 தேக்கரண்டி உப்பும் சேர்த்து வேகவிடவும்.
  4. வெந்த கம்பை உருண்டையாக உருட்டி வைத்தால் கம்பு சோறு தயார் .
  5. ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி உப்புடன் 4 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
  6. 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்க்கவும்.
  7. கொதிக்கும் தண்ணீரின் மேல் ராகி மாவை சேர்த்து மூடி வைக்கவும்.
  8. 5 நிமிடங்கள் கழித்து களிக் கிண்டும் மத்தினால் கட்டி இல்லாமல் கிண்டி மூடி வைத்து வேக விடவும்.
  9. கையை ஈரப்படுத்தி களியைத் தொட்டால் கைகளில் ஒட்டாமல் வரும்.
  10. களி வெந்துவிட்டது என அறியலாம்.
  11. சிறு உருண்டைகளாக உருட்டி பாத்திரத்தில் மூடி வைக்கலாம்.
  12. மொச்சைக் கொட்டையை ஊற வைத்து குக்கரில் 2 மேஜைக் கரண்டி உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
  13. வெந்த மொச்சைக் கொட்டையில் சிறிதளவு சுண்டலுக்கு எடுத்துக் கொள்ளவும்.
  14. ஒரு வாணலியில் 1 மேஜைக் கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும் .
  15. அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,கறி வேப்பிலை, கொத்துமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
  16. மஞ்சள் தூள்,கொத்துமல்லி,மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
  17. வெந்த மொச்சையை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  18. சுவை மிக்க சுண்டல் தயார்.
  19. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  20. மஞ்சள் தூள்,நறுக்கிய கத்திரிக்காய்,அரைத்த கொத்துமல்லி,மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
  21. மொச்சைக் கொட்டையை சேர்த்து வதக்கவும்.
  22. நறுக்கிய கொத்துமல்லி,கறி வேப்பிலை சேர்க்கவும்.
  23. அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
  24. புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
  25. குழம்பு வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.
  26. சுவையும் சத்தும் நிறைந்த சிறு தானிய உணவு தயார் !

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ramani Thiagarajan
Feb-05-2019
Ramani Thiagarajan   Feb-05-2019

கம்பு சோறு, ராகி களியுடன் மொச்சைக் கொட்டைக் குழம்பு மிகவும் பாரம்பரிய உணவாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சக்தி தர வல்ல உணவாகும்.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்