வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Plantain vada by jassi aarif at BetterButter
115
0
0.0(0)
0

வாழைப்பூ வடை

Feb-05-2019
jassi aarif
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

வாழைப்பூ வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ ஒரு கப் சுத்தம் செய்தது
  2. கடலைப்பருப்பு 2 கப் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  3. சோம்பு ஒரு ஸ்பூன்
  4. பூண்டு பல் 2
  5. தனி மிளகாய் தூள் ஒன்றரை ஸ்பூன் அல்லது வரமிளகாய் ஒன்று
  6. மல்லித்தழை கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
  7. பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வடைகளை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு தனி மிளகாய்த்தூள் அல்லது வற்றல் மிளகாய் ஒன்று சோம்பு அனைத்தையும் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
  2. அரைத்த பருப்புடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து நன்றாக பிசையவும்
  3. பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் கறிவேப்பிலை மல்லித்தழை எல்லாத்தையும் சேர்த்து நன்றாக பிசையவும்
  4. உருண்டையாகவோ அல்லது படத்தில் இருப்பது போல் தட்டையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. சுவையான சத்தான வாழைப்பூ வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்