வீடு / சமையல் குறிப்பு / கோதுமை தோசை

Photo of Wheat dosa by Mohamed Zeaudeen at BetterButter
378
0
0.0(0)
0

கோதுமை தோசை

Feb-05-2019
Mohamed Zeaudeen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை தோசை செய்முறை பற்றி

அனைவருக்கும் ஏற்ற உணவு எளிதில் ஜீரணமாகக்கூடியது சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. வெள்ளை ரவை 4 டேபிள்ஸ்பூன்
  4. பச்சரிசி மாவு 3 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணை தேவையான அளவு
  7. சின்ன வெங்காயம் 10
  8. பச்சைமிளகாய்-2
  9. மல்லித்தழை சிறிதளவு
  10. கேரட் ஒன்று
  11. சீரகம் அரை டீஸ்பூன்
  12. கெட்டி மோர் கால் டம்ளர்

வழிமுறைகள்

  1. ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும் வெங்காயம் மல்லி இலை பொடியாக நறுக்கி பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்
  2. கேரட்டை துருவிக் கொள்ளவும்
  3. கோதுமை மாவு உப்பு சீரகம் பச்சரிசி மாவு ஊறிய ரவை மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும்
  4. அதில் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் மல்லித்தழை சேர்த்து கலக்கி சூடாக இருக்கும் தோசைக்கல்லில் ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையை ஊற்றி அதன் மேல் துருவிய கேரட்டை தூவவும்
  5. கரண்டியால் அதை அழுத்திவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு மூடி வெந்ததும் தோசையை திருப்பி மறுபுறம் எண்ணெய் விட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுத்து விடவும்
  6. இதற்கு வரமிளகாய் பூண்டு சட்னி மேலும் சுவையைக் கொடுக்கும்
  7. மிகவும் எளிதில் ஜீரணமாகக் கூடியது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்