வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு பழ தோல் பச்சடி

Photo of Orange skin pachadi by Priya Tharshini at BetterButter
1039
0
0.0(0)
0

ஆரஞ்சு பழ தோல் பச்சடி

Feb-05-2019
Priya Tharshini
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு பழ தோல் பச்சடி செய்முறை பற்றி

மிகவும் பாரம்பரியமான ஆரோக்கியமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆரஞ்சு பழ தோல் - 2 பழத்தின் தோல்
  2. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  3. கடுகு - 1/4 தேக்கரண்டி
  4. உ.பருப்பு -1/2 தேக்கரண்டி
  5. க.பருப்பு - 1/4 தேக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கு
  7. பெருங்காயம் - சிறிது
  8. ப.மிளகாய் - 2
  9. புளி கரைசல் - 1 கப்
  10. ம. பொடி - 1/4 தேக்கரண்டி
  11. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  12. வெல்லம் - 1 மேசைக்கரண்டி
  13. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  14. தண்ணீர் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு பழ தோலை பொடிபொடியாக நறுக்கவும்.
  2. எண்ணெய் சூடாக்கி கடுகு,உ.பருப்பு,க.பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  3. அதில் நறுக்கின ப.மிளகாய்,பழ தோல் சேர்க்கவும்.
  4. 3 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.
  5. புளி கரைசல் , உப்பு,ம.பொடி,மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேகவிடவும்.
  6. பழதோல் வெந்து பச்சைவாசனை போனதும் வெல்லம் சேர்க்கவும்.
  7. அரிசி மாவு கட்டி இல்லாமல் கரைத்து சேர்க்கவும். 3 - 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  8. ஆரஞ்சு பழ தோல் பச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்