வீடு / சமையல் குறிப்பு / ஒடியல் மாவு லட்டு

Photo of Palmyra Sprout Flour Laddoo by Menaga Sathia at BetterButter
1513
0
0.0(0)
0

ஒடியல் மாவு லட்டு

Feb-07-2019
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஒடியல் மாவு லட்டு செய்முறை பற்றி

ஒடியல் மாவு என்பது பனங்கிழங்கு மாவு.பனங்கிழங்கினை வேகவைத்த பின் நார் நீக்கி துண்டுகளாகி வெயிலில் காயவைத்து அரைத்து சலித்து எடுத்தால் மாவு ரெடி.இதில் அதிக சத்துக்கள் இருக்கு.இந்த மாவில் தான் லட்டு செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனங்கிழங்கு மாவு -1/2 கப்
  2. பொட்டுக்கடலை மாவு -1/2 கப்
  3. பொடித்த சர்க்கரை-3/4 கப்
  4. ஏலக்காய் தூள் -1/4 டீஸ்பூன்
  5. நெய்-1/4 கப்
  6. திராட்சை -2 டீஸ்பூன்
  7. முந்திரி -5,உடைத்தது

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் இரண்டு மாவுகளை எடுக்கவும்.
  2. பின் ஏலக்காய்தூள்,சர்க்கரை இவற்றை ஒன்றாக மாவுடன் கலந்து வைக்கவும்.
  3. கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி,திராட்சை சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும்.
  4. அந்த கடாய் சூட்டிலயே மாவினை கொட்டி கலக்கவும்.
  5. சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.
  6. சுவையான,சத்துமிகுந்த லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்