வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய தோசை

Photo of Multi Millets Dosa Recipe by Ayesha Shifa at BetterButter
2451
0
0.0(0)
0

சிறுதானிய தோசை

Feb-07-2019
Ayesha Shifa
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான சத்துக்கள் அடங்கிய கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு கால் கப்
  2. சோள அரிசி கால் கப்
  3. வரகு கால் கப்
  4. தினை கால் கப்
  5. கைக்குத்தல் அவல் கால் கப்
  6. உளுந்து அரை கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. ஒரு டீஸ்பூன் சீரகம்
  9. அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. இரண்டு டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கம்பு, சோள அரிசி, வரகு, திணை, உளுந்து, சிகப்பு கைக்குத்தல் அவல் இவற்றை ஒரு பவுலில் சேர்க்கவும்
  2. இவற்றை இரண்டு மூன்று தண்ணீரில் நன்கு அலசவும்
  3. பின்னர் அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும்
  4. ஐந்து மணிநேரத்திற்கு பின் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளவும்
  5. நன்கு மையாக அரைத்த உடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலந்து அதை 10 மணி நேரம் புளிக்க விடவும்
  6. பத்து மணி நேரத்திற்கு பின் மாவு புளித்துவிடும். அதன்பின்னர் சீரகம், பெருங்காயம், சில்லி ப்ளேக்ஸ், சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து தோசையாக வார்க்கலாம்.
  7. தோசை மாவின் பதம் நார்மல் தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் போதும்
  8. ஒரு தோசை தவாவை நன்கு காய வைத்து அதில் சிறிது எண்ணெய் தேய்த்து மாவை மெல்லிதாக ஊற்றி பரப்பி தோசையை இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்
  9. ஆரோக்கியமான மொறுமொறுப்பாக சிறுதானிய தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்