BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு

Photo of Health mix by Mohamed Zeaudeen at BetterButter
0
0
0(0)
0

சத்துமாவு

Feb-07-2019
Mohamed Zeaudeen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு செய்முறை பற்றி

ஆறு மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்றது சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்
  2. ராகி ஒரு கிலோ
  3. கம்பு ஒரு கிலோ
  4. சோளம் ஒரு கிலோ
  5. பாசிப்பயறு அரை கிலோ
  6. கொள்ளு அரை கிலோ
  7. மக்காச்சோளம் ஒரு கிலோ
  8. பொட்டுக்கடலை ஒரு கிலோ
  9. சோயா ஒரு கிலோ
  10. தினை அரை கிலோ
  11. கருப்பு உளுந்து அரை கிலோ
  12. சம்பா கோதுமை அரை கிலோ
  13. நிலக்கடலை அரை கிலோ
  14. மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
  15. ஐவ்வரிசி அரை கிலோ
  16. வெள்ளை எள் 100 கிராம்
  17. கசகசா 50 கிராம்
  18. ஏலக்காய் 10 கிராம்
  19. முந்திரி பருப்பு 50 கிராம்
  20. பாதாம் பருப்பு 50 கிராம்
  21. ஓமம் 50 கிராம்
  22. சுக்கு 50 கிராம்
  23. பிஸ்தா 50 கிராம்
  24. சிகப்பரிசி 50கிராம்
  25. கைக்குத்தல் அரிசி 50 கிராம்
  26. கவுனி அரிசி 50 கிராம்
  27. வரகரிசி அம்பது கிராம்
  28. சாமை அரிசி 50 கிராம்
  29. குதிரைவாலி அரிசி 50 கிராம்

வழிமுறைகள்

  1. ராகி சோளம் கம்பு பாசிப்பயறு கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால் தானியங்கள் முளைவிட்டு இருக்கும்
  3. அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும் மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும் . காய வைத்த அனைத்து பொருட்களையும் மீதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
  4. இந்த அனைத்து பொருட்களும் தமிழ் மருந்து கடைகளில் அல்லது மளிகை கடைகளிலும் கிடைக்கும் தனித்தனியாக வாங்கியும் மொத்தமாகவும் செய்யலாம்
  5. மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுக்க வேண்டும் வறுத்து ஆற வைத்த பின்னர் அரவை மில்லில் கொடுத்து அரைத்து எடுக்க வேண்டும்
  6. அரைத்த மாவை நன்கு ஆற வைத்த பின்னர் டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும்
  7. இந்த மாவானது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்
  8. நாம் செய்யும் பக்குவத்தில் தனது நீண்ட நாள் நன்றாக இருக்கும் பூச்சி ஏதேனும் வராத அளவிற்கு பாதுகாப்பாக வைக்கவும்
  9. இந்த மாவை தேவைக்கேற்ப கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி சீனி அல்லது பனைவெல்லம் ஏதேனும் சேர்த்து வைக்க வேண்டும்
  10. இந்த மாவை அடுப்பில் வைக்கும்போது கைவிடாத அளவிற்கு கிண்ட வேண்டும் இல்லையெனில் கட்டிகட்டியாக விழ ஆரம்பித்துவிடும்
  11. சர்க்கரை நோயாளிகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் உப்பு சேர்த்து பருகலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்