வீடு / சமையல் குறிப்பு / வீட்டு சத்து மாவு

Photo of Home made health mix by Mohamed Zeaudeen at BetterButter
14
0
0.0(0)
0

வீட்டு சத்து மாவு

Feb-08-2019
Mohamed Zeaudeen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வீட்டு சத்து மாவு செய்முறை பற்றி

ஆறு மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்றது. சத்தானது

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. ராகி ஒரு கிலோ
 2. கம்பு ஒரு கிலோ
 3. சோளம் ஒரு கிலோ
 4. பாசிப்பயறு அரை கிலோ
 5. கொள்ளு அரை கிலோ
 6. மக்காச்சோளம் ஒரு கிலோ
 7. பொட்டுக் கடலை ஒரு கிலோ
 8. சோயா ஒரு கிலோ
 9. தினை அரை கிலோ
 10. கருப்பு உளுந்து அரை கிலோ
 11. சம்பா கோதுமை அரை கிலோ
 12. நிலக்கடலை அரை கிலோ
 13. மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
 14. ஐவ்வரிசி அரை கிலோ
 15. வெள்ளை எள் 100 கிராம்
 16. கசகசா 50 கிராம்
 17. ஏலக்காய் 10 கிராம்
 18. முந்திரி பருப்பு 50 கிராம்
 19. பாதாம் பருப்பு 50 கிராம்
 20. ஓமம் 50 கிராம்
 21. சுக்கு 50 கிராம்
 22. பிஸ்தா 50 கிராம்
 23. சிகப்பரிசி 50 கிராம்
 24. கைக்குத்தல் அரிசி 50 கிராம்
 25. கவுனி அரிசி 50 கிராம்
 26. வரகரிசி 50 கிராம்
 27. சாமை அரிசி 50 கிராம்
 28. குதிரை வாலி அரிசி 50 கிராம்

வழிமுறைகள்

 1. ராகி சோளம் கம்பு பாசிப்பயறு கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
 2. தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால் தானியங்கள் முளைவிட்டு இருக்கும்
 3. அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும் மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும் காயவைத்த அனைத்து பொருட்களையும் இந்த மீதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்
 4. அனைத்து பொருட்களும் தமிழ் மருந்து கடைகள் அல்லது மளிகை கடைகளில் கிடைக்கும்
 5. நீங்கள் அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்த பின் அரவை மில்லில் கொடுத்து அரைத்து எடுக்கவும்
 6. அரைத்த மாவை நன்கு ஆற வைத்த பின் ஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும்
 7. இந்த மாவானது நீண்ட நாள் கெடாமல் இருக்கும்
 8. நாம் செய்யும் பக்குவத்தில் தான் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும் பூச்சி ஏதேனும் வராததற்கு பாதுகாப்பாக வைக்கவும்
 9. இந்த மாவை தேவைக்கேற்ப கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி சீனி அல்லது பனைவெல்லம் சேர்த்து வைக்க வேண்டும்.
 10. இந்த மாவை அடுப்பில் வைக்கும்போது கைவிடாத அளவுக்கு கிண்ட வேண்டும் இல்லையெனில் கட்டி கட்டியாக வர ஆரம்பித்துவிடும்.
 11. சர்க்கரை நோயாளியாக இருந்தால் அவர்களுக்கு உப்பு சேர்த்து பருகலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்