வீடு / சமையல் குறிப்பு / " வெள்ளை சிக்கன் குருமா "

Photo of "White chicken kuruma " by Navas Banu L at BetterButter
460
0
0.0(0)
0

" வெள்ளை சிக்கன் குருமா "

Feb-09-2019
Navas Banu L
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

" வெள்ளை சிக்கன் குருமா " செய்முறை பற்றி

" வெள்ளை சிக்கன் குருமா " தேவையான பொருட்கள் சிக்கன் - 1 கிலோ கிராம்பு - 5 ஏலக்காய் - 5 பட்டை - 1 துண்டு பெரிய வெங்காய பேஸ்ட் - 1 கப் இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூண் பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூண் நிலக்கடலை பேஸ்ட் - 4 டீஸ்பூண் தேங்காய் அரைத்த பேஸ்ட் - 4 டீஸ்பூண் மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண் மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூண் கரம் மஸாலா - 1/2 டீஸ்பூண் தண்ணீர் - 1 கப் பச்சை மிளகு - 8 ( இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.) பால் - 200 மில்லி நெய் - 2 டீஸ்பூண் எண்ணை - 1 கப் உப்பு - தேவைக்கு செய்முறை 1. கோழியைக் கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும். 2.ஒரு பெரிய கடாய் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும். 3. எண்ணை சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போடவும். 4.வெங்காய விழுது, இஞ்சி விழுது, பூண்டு விழுது, நிலக்கடலைப் பேஸ்ட், தேங்காய்ப் பேஸ்ட் இவை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும். 5.இதனுடன் மஞ்சள் பொடி, மிளகு பொடி, கரம் மஸாலாபொடி, தேவைக்கு உப்பும், அரைக்கப் தண்ணீரும் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். 6. 5 நிமிடம் கழிந்த உடன் அதில் கோழியைச் சேர்க்கவும். 7. அதனுடன் இரண்டாக கீறி வைத்திருக்கிற பச்சை மிளகைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி 15 நிமிடம் வேக வைக்கவும். 8. 15 நிமிடம் கழிந்த பிறகு பாலைச் சேர்த்து இரண்டு டீஸ்பூண் நெய் சேர்த்துக் கொடுக்கவும். 9. 5 நிமிடம் ஸிம்மில் வைத்து வெந்ததும் இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழி - 1 கிலோ
  2. கிராம்பு - 5
  3. ஏலக்காய் - 5
  4. பட்டை - 1 துண்டு
  5. பெரிய வெங்காயம் அரைத்த பேஸ்ட் - 1 கப்
  6. பூண்டு விழுது - 1 டீஸ்பூண்
  7. இஞ்சி விழுது - 1 டீ ஸ்பூண்
  8. நிலக்கடலை அரைத்த பேஸ்ட் - 4 டீஸ்பூண்
  9. தேங்காய் அரைத்த பேஸ்ட் - 4 டீஸ்பூண்
  10. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
  11. சிவப்பு மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூண்
  12. கரம் மஸாலா - 1/2 டீஸ்பூண்
  13. தண்ணீர் - 1 கப்
  14. உப்பு - தேவைக்கு
  15. பச்சை மிளகு - 8 ( இரண்டாகக் கீறிக் கொள்ளவும். )
  16. பால் - 200 மில்லி
  17. நெய் - 2 டீஸ்பூண்
  18. எண்ணை - 1 கப்

வழிமுறைகள்

  1. 1. ஒரு பெரிய கடாய் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும்.
  2. 2. எண்ணை சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை போடவும்.
  3. 3.வெங்காய விழுது, பூண்டு, விழுது, இஞ்சி விழுது, நிலக்கடலை பேஸ்ட், தேங்காய் பேஸ்ட் எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. 4.இதனுடன் மஞ்சள் பொடி, மிளகு பொடி, கரம் மஸாலாபொடி, தேவைக்கு உப்பும்,அரைக்கப் தண்ணீரும் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
  5. 5 . 5 நிமிடம் கழிந்த உடன் கோழியைச் சேர்க்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகையும் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும்.
  6. 6. 15 நிமிடம் கழிந்த உடன் பாலைச் சேர்க்கவும். 2 டீஸ்பூண் நெய்யும் சேர்த்துக் கொடுக்கவும்.
  7. 7.எல்லாம் நன்றாக மிக்ஸ் செய்து மூடி வைத்து 5 நிமிடம் ஸிம்மில் வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்