வீடு / சமையல் குறிப்பு / பச்சை மணத்தக்காளிக்காய் குழம்பு

Photo of PACHCHAI MANATHAKKALIKAAY KUZHAMBU by Radha Balu at BetterButter
482
0
0.0(0)
0

பச்சை மணத்தக்காளிக்காய் குழம்பு

Feb-10-2019
Radha Balu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை மணத்தக்காளிக்காய் குழம்பு செய்முறை பற்றி

சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றது. உடலுக்கு நலம் தரும் ஆரோக்யமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை மணத்தக்காளிக்காய் – ஒரு கப்
  2. நறுக்கிய சின்ன வெங்காயம் –  ஒரு கப்
  3. தேங்காய்ப்பால் – ஒரு கப்
  4. தக்காளி – 1
  5. புளி – எலுமிச்சை அளவு
  6. கறிவேப்பிலை – சிறிதளவு
  7. மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
  8. காரப்பொடி -- 1/2 டீஸ்பூன்
  9. குழம்பு பொடி – 2 டீஸ்பூன்
  10. பெருங்காயம் -- 1/8 டீஸ்பூன் 
  11. கடுகு,  வெந்தயம், கடலைப்பருப்பு, சீரகம்– தலா அரை டீஸ்பூன்
  12. நல்லெண்ணெய் -- 4 டீஸ்பூன்
  13. உப்பு – தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மணத்தக்காளியை அலம்பி காம்பு நீக்கவும். புளியுடன் 1கப் நீர் சேர்த்து கெட்டியாகக் கரைக்கவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, , நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. அதில் கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், குழம்பு பொடி  போட்டுக் கிளறவும்.
  4. மணத்தக்காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, புளியைக் கரைத்து விடவும்.
  5. உப்பு சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
  6. இதில் தேங்காய்ப்பால் சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
  7. சாதத்தில் பிசைந்து பொறித்த அப்பளத்துடன் சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்