வீடு / சமையல் குறிப்பு / ஆல்இன் ஆல் ஸ்டிர் ஃப்ரை

Photo of all in all veg  stir fry by shadiqah hasana at BetterButter
360
0
0.0(0)
0

ஆல்இன் ஆல் ஸ்டிர் ஃப்ரை

Feb-11-2019
shadiqah hasana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆல்இன் ஆல் ஸ்டிர் ஃப்ரை செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய இந்த ஸ்டிர் ப்ரை சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.சப்பாத்திக்குள் ஸ்டஃப் செய்யலாம்.ப்ரட் சாண்ட்விச் செய்யும் பொழுதும் உபயோகிக்கலாம்.சமோசா கட்லட் போன்றவற்றுக்கும் உபயோகித்துக்கொள்ளக்கூடிய ஆல்இன்ஆல் ப்ரை ஆகும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய முட்டைகோஸ் 2 கப்
  2. நறுக்கிய பீன்ஸ் 1 கப்
  3. நறுக்கிய கேரட் 1 கப்
  4. நறுக்கிய குடைமிளகாய் 1 கப்
  5. உதிர்த்த கார்ன் 1/2 கப்
  6. நீளமாக நறுக்கிய வெங்காயம் 1 கப்
  7. நறுக்கிய வெங்காயத்தாள் 1/2 கப்
  8. சிக்கன் ஸ்டாக் 2 க்யூப்
  9. மல்லித்தழை 1:4 கப்
  10. மிளகாய்ப்பொடி 2 டீஸ்பூன்
  11. எண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணைய் விட்டு வெங்காயம் சேர்க்கவும்
  2. வெங்காயம் நிறம் மாறியதும் சிக்கன் ஸ்டாக் க்யுப்களை சேர்த்து கரையும் வரை கிளறவும்
  3. ஒவ்வொரு காயாக சேர்த்து கிளறி சிறிது நீர் தெளித்து மூடி வைக்கவும் அதிக நீர் சேர்க்க கூடாது சுவை மாறிவிடும்
  4. காரப்பொடி சேர்த்து இறுதியாக நறுக்கிய மல்லி ஸ்ப்ரிங்ஆனியன் சேர்த்து கிளறவும்
  5. கமகமக்கும் சுவையான வெஜ் ஸ்டிர்ப்ரை தயார்.வெஜிடபிள் ஸ்டாக் சேர்க்கப்படுவதால் உப்பு சேர்க்க தேவை இல்லை.இந்த அளவுக்கு 2 கியூப்கள் போதுமானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்