வீடு / சமையல் குறிப்பு / " பனானா கட் லெஸ் "
நேந்திரம் பழம் ( ஏத்தம்பழம்) நல்ல பழுத்தது சிறிதாக வெட்டியது - 3 கப் தேங்காய் துருவல் - ஒன்றரை கப் முட்டை - 3 சீனி - 4 டேபிள் ஸ்பூண் கிஸ்மிஸ் - 50 கிராம் முந்திரி பருப்பு - 50 கிராம் ஏலக்காய் பொடிச்சது - அரை டீஸ்பூண் நெய் - 6 டேபிள் ஸ்பூண் ஒரு Pan அடுப்பில் வைத்து 3 table spoon நெய் விட்டு முந்திரி, கிஸ்மிஸ் இரண்டையும் றோஸ்ட் பண்ணி எடுக்கவும். அந்த நெய்யில் தேங்காய் சேர்த்து light brown கலரில் றோஸ்ட் செய்து வைக்கவும். அதே பேனில் மீதி இருக்கும் 3 table spoon நெய் விட்டு அதில் நறுக்கி வைத்திருக்கும் பழம் போட்டு நன்றாக றோஸ்ட் பண்ணவும். பழம் நன்றாக றோஸ்ட் ஆகி வரும் போது 3 முட்டையை நன்றாக beat செய்து பழத்துடன் சேர்த்து மிக்ஸ் பண்ணி நன்றாக வேக விடவும். வெந்ததும் அதில் சீனி சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.ஏலக்காய் பொடி சேர்க்கவும். றோஸ்ட் செய்து வைத்திருக்கிற தேங்காய் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். இதில் றோஸ்ட் பண்ணி வைத்திருக்கிற முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி அடுப்பை ஆஃப் பண்ணி இறக்கவும். இது சாப்பிட மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். நன்றி.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க