வீடு / சமையல் குறிப்பு / வெந்தயம் உள்ளி கார புளி குழம்பு

Photo of Fenugreek Shallot spicy tango gravy by Jeba Jayaseelan at BetterButter
401
0
0.0(0)
0

வெந்தயம் உள்ளி கார புளி குழம்பு

Feb-12-2019
Jeba Jayaseelan
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெந்தயம் உள்ளி கார புளி குழம்பு செய்முறை பற்றி

சுவையான ஆரோக்கியமான குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புளி கரைசல் 1 கப்
  2. சின்ன வெங்காயம் 15
  3. தக்காளி பெரியது 2
  4. மிளகாய்-2
  5. வத்தல் பொடி 2 ஸ்பூன்
  6. கொத்தமல்லி பொடி 3 ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
  8. சீரகம் ஒரு டீஸ்பூன்
  9. பூண்டு 5 பல்
  10. தேங்காய் துருவல் ஒரு கப்
  11. வெந்தயம் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  2. வெந்தயம் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. வெள்ளைப் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. நறுக்கிய தக்காளியை இதனுடன் சேர்க்கவும் சிறிதளவு உப்பும் சேர்த்து வதக்கவும்
  6. இதனுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கொத்தமல்லித் தூள் சேர்த்து வதக்கவும்
  7. மசாலா நன்கு வதங்கியவுடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்
  8. தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  9. மிக்ஸியில் வெங்காயம் தேங்காய் சீரகம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்
  10. குழம்பு நன்றாக கொதித்த உடன் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்
  11. என்னை பிரிந்து தனியாக வந்தவுடன் குழம்பை இறக்கி விடவும்
  12. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  13. சூடான எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு வெந்தயம் சீரகம் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக தாளிக்கவும்
  14. ஆரோக்கியமான வெந்தயக் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்