வீடு / சமையல் குறிப்பு / கேரட் பீட்ரூட் ஸ்டஃப்டு கோதுமை மாவு குலாப் ஜாமூன்

Photo of Carrot Beetroot Stuffed with Wheat Gulab Jamun by Bena Aafra at BetterButter
16
1
0.0(0)
0

கேரட் பீட்ரூட் ஸ்டஃப்டு கோதுமை மாவு குலாப் ஜாமூன்

Feb-12-2019
Bena Aafra
54 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பீட்ரூட் ஸ்டஃப்டு கோதுமை மாவு குலாப் ஜாமூன் செய்முறை பற்றி

குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.ஆரோக்கியமான உணவு.

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. கோதுமை மாவு-1கப்
 2. பால் -2கப்
 3. கேரட்-துருவியது
 4. பீட்ரூட் -துருவியது
 5. நெய்
 6. ஏலக்காய்
 7. முந்திரி
 8. பாதாம்
 9. பிஸ்தா
 10. மில்க் கோவா அல்லது மில்க்மெய்டு
 11. சர்க்கரை -2கப்
 12. தண்ணீர் -2கப்
 13. குங்குமப்பூ-1பின்ச்

வழிமுறைகள்

 1. பாத்திரத்தில் 2கப் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 2. ஏலக்காய் தூள் சேர்த்து வற்றக் காய்ச்சவும்.
 3. கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிவிழாமல் கிளறவும் .
 4. மாவு பிசையும் பதம் வந்ததும் 2ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும் .
 5. நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும்.
 6. மற்றொரு பாத்திரம் வைத்து 2ஸ்பூன் நெய் விட்டு துருவிய கேரட் பீட்ரூட் சேர்த்து வதக்கவும் .
 7. நறுக்கிய முந்திரி ,பாதாம்,பிஸ்தா சேர்த்து வதக்கவும்.
 8. அதனுடன் மில்க் கோவா அல்லது மில்க்மெய்டு சேர்த்து கிளறி இறக்கவும்.
 9. இன்னொரு பாத்திரத்தில் 2கப் தண்ணீர் ஊற்றி 2கப் சர்க்கரை சேர்த்து சீனிபாகு காய்ச்சவும்.
 10. குங்குமப்பூ ,ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
 11. கம்பிப்பதம் வந்ததும் இறக்கவும் .
 12. பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து கேரட்பீடரூட் கலைவையை வைத்து ஸ்டஃப் செய்து கொள்ளவும்.
 13. அவற்றை நெய்யில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
 14. அவற்றை சீனிப்பாகில் போட்டு ஊறவிடவும்.
 15. அவற்றின் மேல் துருவிய பாதாம் முந்திரி பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்