வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் தொக்கு

Photo of Bitterquard thokku by kifa aboo at BetterButter
342
2
5.0(0)
0

பாகற்காய் தொக்கு

Feb-13-2019
kifa aboo
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் தொக்கு செய்முறை பற்றி

டேஸ்டி சைடுடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாகற்காய் 3
  2. பல்லாரி வெங்காயம் 3
  3. தக்காளி-2
  4. புளி ஒரு லெமன் சைஸ் அளவு
  5. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கு
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. பூண்டுப்பற்கள் 7
  10. கடுகு ஒரு டீஸ்பூன்
  11. வெந்தயம் ஒரு டீஸ்பூன்
  12. நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் பாகற்க்காயை தோல் சீவி அதில் உள்ள விதைகளை நீக்கி உப்பு மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்
  2. புளியை தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
  3. பின் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு ஊற வைத்த பாகற்காயை வடித்து அதில் போட்டு நன்கு வறுத்து எடுக்க வேண்டும்
  4. மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் பூண்டு கறிவேப்பிலை வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
  5. பிறகு அதனுடன் தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு போட்டு நன்கு வதக்கி வறுத்து எடுத்த பாகற்காய்போட்டு நன்கு வதக்கவும்
  6. பிறகு கரைத்து வைத்துள்ள புளியை அதில் ஊற்றி தண்ணீர் விட்டு எண்ணெய் மேலே வரும் வரை நன்கு வதக்கவும்
  7. இப்போது சுவையான பாகற்காய் தொக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்