வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான க்ரீன் புலாவ்

Photo of Healthy Green Pulao by Sowmya Sundar at BetterButter
382
0
0.0(0)
0

ஆரோக்கியமான க்ரீன் புலாவ்

Feb-14-2019
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியமான க்ரீன் புலாவ் செய்முறை பற்றி

கொத்தமல்லி , புதினா மற்றும் பாலக் கீரை சேர்த்து செய்த ஆரோக்கியமான புலாவ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரியாணி அரிசி - 1 ௧ப்
  2. தண்ணீர் 1.5 கப்
  3. கொத்தமல்லித் தழை அரை கப்
  4. பாலக்கீரை இலைகள் ௧ால் கப்
  5. புதினா கால் கப்
  6. பச்சை பட்டாணி கால் கப்
  7. பச்சை மிளகாய் மூன்று
  8. இஞ்சி ஒரு துண்டு
  9. பூண்டு 4 பல்
  10. பெரிய வெங்காயம் ஒன்று
  11. தக்காளி ஒன்று
  12. உப்பு தேவையான அளவு
  13. எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன்
  14. தாளிக்க :
  15. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  16. சீர௧ம் 1 டீஸ்பூன்
  17. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 2
  18. முந்திரிப்பருப்பு 6

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் கொத்தமல்லி தழை ,பாலக், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ,பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. சிறிது வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பின் பச்சை பட்டாணி மற்றும் புதினா கீரையை சேர்த்து வதக்கவும்
  5. பின் அதனுடன் களைந்து ஊற வைத்த அரிசியை சேர்த்து லேசாக வறுக்கவும்
  6. இவை அனைத்தும் குக்கரில் போட்டு தண்ணீர் ,உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை வேக விடவும்
  7. குக்கரை திறந்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்