வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் வறுவல்

Photo of Chicken varuval by sudha rani at BetterButter
425
0
0.0(0)
0

சிக்கன் வறுவல்

Feb-14-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் வறுவல் செய்முறை பற்றி

இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் 600 கிராம்
  2. சின்ன வெங்காயம் 1 கப்
  3. தக்காளி 3
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 2
  6. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  7. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  8. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
  9. கறி மசால் தூள் 2ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் 1/4 கப்
  13. கடுகு 1 ஸ்பூன்
  14. கறிவேப்பிலை சிறிது
  15. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி சிக்கன் ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
  3. பின் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பின் நறுக்கிய சிக்கன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  7. பின் ஒரு 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக வைக்கவும்
  8. பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  9. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வேகவிடவும்
  10. பின் நன்கு வெந்து தளதளவென்று வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  11. சுவையான சிக்கன் வறுவல் ரெடி
  12. இத சுக்காவா வேண்டும் என்றால் தண்ணீர் முழுவதும் சுண்டியதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்