வீடு / சமையல் குறிப்பு / " ஆட்டுக்கால் பாயா "

Photo of " Aattu kal paaya " by Navas Banu L at BetterButter
1
0
0.0(0)
0

" ஆட்டுக்கால் பாயா "

Feb-15-2019
Navas Banu L
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

" ஆட்டுக்கால் பாயா " செய்முறை பற்றி

ஆட்டுக்கால் பாயா செய்ய தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் நான்கு எடுத்து அடுப்பில் வைத்துச் சுட்டு முடி எல்லாம் நீக்கி சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும். தாளிக்க தேவையான பொருட்கள் : பட்டை -2 ஏலக்காய் - 4 கிராம்பு - 4 பச்சை மிளகு - 3 தக்காளி - 3 சிறிய வெங்காயம் - 20 மல்லி தழை - தேவைக்கு கறிவேப்பிலை - தேவைக்கு இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூண் பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூண் தேங்காய் அரைத்த விழுது - அரை கப் தயிர் - கால் கப் உப்பு தேவைக்கு. எண்ணை - 1 டேபிள் ஸ்பூண் கறி மஸாலாக்கு தேவையான பொருட்கள் : வற்றல் மிளகு - 5 முழு மல்லி - 2 டேபிள் ஸ்பூண் பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூண் சீரகம் - அரை டீஸ்பூண் நல்ல மிளகு - அரை டீஸ்பூண் மஞ்சள் பொடி - கால் டீஸ்பூண் கசகசா - 1 டீஸ்பூண் இவை அனைத்தையும் வறுத்து நைஸாகப் பொடித்துக் கொள்ளவும். செய் முறை : குக்கர் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூண் எண்ணை ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகு போட்டு வதக்கவும். கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடித்து வைத்திருக்கிற மஸலாப் பொடியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.வதங்கிய பிறகு ஆட்டுக் காலை போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி ஆட்டுக்கால் தண்ணீரில் முங்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். கொதித்த உடன் அடுப்பை ஸிம்மில் ஆக்கி விட்டு தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறி தண்ணீர் வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.குக்கரை மூடி ஐந்து விசில் வரை வேக விடவும். நன்றி.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. ஆட்டின் கால் - 4
 2. தாளிக்க தேவையான பொருட்கள்
 3. பட்டை - 2
 4. ஏலக்காய் - 4
 5. கிராம்பு - 4
 6. பச்சைமிளகு - 3
 7. தக்காளி - 3
 8. சிறிய வெங்காயம் - 20
 9. மல்லித்தழை - தேவைக்கு
 10. கறிவேப்பிலை - தேவைக்கு
 11. இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூண்
 12. பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூண்
 13. தேங்காய் அரைத்த விழுது - 1/2 கப்
 14. தயிர் - கால் கப்
 15. எண்ணை - 1 டேபிள் ஸ்பூண்
 16. உப்பு - தேவைக்கு
 17. கறி மஸாலாவுக்கு தேவையான பொருட்கள்
 18. வற்றல் மிளகு - 5
 19. முழு மல்லி - 2 டேபிள்ஸ்பூண்
 20. சோம்பு - 1/2 டீஸ்பூண்
 21. சீரகம் - 1/2 டீஸ்பூண்
 22. நல்லமிளகு - 1/2 டீஸ்பூண்
 23. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
 24. கசகசா - 1 டீஸ்பூண்
 25. இவை அனைத்தையும் வறுத்து நைஸாகப்
 26. பொடித்துக் கொள்ளவும்.

வழிமுறைகள்

 1. 1. ஆட்டுக் கால் நான்கையும் அடுப்பில் வைத்து சுட்டு முடி எல்லாம் நீக்கி சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும்.
 2. 2. குக்கர் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூண் எண்ணை ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகு போட்டு வதக்கவும்.
 3. 3.கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு வதக்கவும்.
 4. 4.இஞ்சி, பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும்.
 5. 5. தக்காளிச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 6. 6.எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடித்து வைத்திருக்கிற மஸலாப் பொடிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
 7. 7.வதங்கிய பிறகு ஆட்டுக்காலைப் போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி ஆட்டுக்கால் தண்ணீரில் முங்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து,உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
 8. 8.கொதித்த உடன் அடுப்பை ஸிம்மில் ஆக்கி விட்டு தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
 9. 9.அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறவும்.
 10. 10.தண்ணீர் வேண்டுமென்றால் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
 11. 11.குக்கரை மூடி வைத்து ஐந்து விசில் வரை வேக விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்