Photo of PANEER POLI by Radha Balu at BetterButter
902
1
0.0(0)
0

பனீர் போளி

Feb-15-2019
Radha Balu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பனீர் போளி செய்முறை பற்றி

சுவையான போளி வகைகளில் ஒன்ற

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா- 2 கப்
  2. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  3. உப்புத்தூள்- ஒரு சிட்டிகை
  4. துருவிய பனீர்- முக்கால் கப்
  5. துருவிய தேங்காய்- அரைகப்
  6. சர்க்கரை -1 கப்
  7. ஏலக்காய்-நான்கு
  8. பொடித்த முந்திரி -கால் கப்
  9. நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. மாவை சலித்து  அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பனீரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் .
  3. பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ் சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பனீரில் கொட்டி கலக்கவும். 
  4. பின்பு அதில் பொடித்த சர்க்கரை மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து மிக்சியில் இந்தக்கலவையை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதிக நேரம் அரைக்கக் கூடாது. நன்கு கலந்து சிறு உருண்டைகளாக  உருட்டவும்.
  5. பிறகு பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து எண்ணை தடவிய வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில்  சிறு வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி, கையால் உருட்டி உள்ளங்கையால் தட்டி அதனை போளிகளாக இடவும்.
  6. தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்துஎடுக்கவும். சுவையான பனீர் போளி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்