வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் வேர்கடலை பர்பி

Photo of Coconut peanut burbi by sudha rani at BetterButter
473
0
0.0(0)
0

தேங்காய் வேர்கடலை பர்பி

Feb-17-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் வேர்கடலை பர்பி செய்முறை பற்றி

இரும்பு சத்து நிறைந்த கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் 1 கப்
  2. வேர்கடலை 1 கப்
  3. வெல்லம் 2 கப்
  4. பாதாம் 10
  5. முந்திரி 10
  6. ஏலத்தூள் 2 ஸ்பூன்
  7. சுக்கு தூள் 1/2 ஸ்பூன்
  8. நெய் 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேர்கடலையை வறுத்து தோல் நீக்கி புடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்
  2. பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும்
  3. பாதாமை தோல் உரித்து வறுத்து முந்திரி சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  4. வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
  5. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து ரெடியாக கொதித்து கொண்டிருக்கும் பாகை எடுத்து தண்ணீரில் சிறிது விடவும்
  6. அதை கையில் எடுத்து உருட்டி கீழே போட்டால் கல் விழுந்த சத்தம் வருவது பதம்
  7. தேங்காய் துருவல் பொடித்த வேர்க்கடலை மற்றும் பொடித்த பாதாம் முந்திரி ஏலக்காய்த்தூள் சுக்கு தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
  8. அந்த பதம் வந்ததும் நெய் விடவும் வெல்ல பாகு ஒரு பளபளப்பாக இருக்கும்
  9. பின் தேங்காய் வேர்கடலை கலவையை சேர்த்து நன்கு கிளறவும்
  10. நன்கு சேர்ந்து வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்