Photo of Ginger rasam by sudha rani at BetterButter
285
0
0.0(0)
0

இஞ்சி ரசம்

Feb-17-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி ரசம் செய்முறை பற்றி

உடலுக்கு தேவையான நல்ல மருந்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருப்பு வேகவைத்த தண்ணீர் 2 கப்
  2. தக்காளி 6
  3. புளி சிறிது
  4. உப்பு தேவையான அளவு
  5. ரசப்பொடி 2 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. பெருங்காயத்தூள் சிறிது
  9. எண்ணெய் 2 ஸ்பூன்
  10. கடுகு 1/2 ஸ்பூன்
  11. அரைக்க:
  12. சீரகம் 1 ஸ்பூன்
  13. மிளகு 1/2 ஸ்பூன்
  14. இஞ்சி 50 கிராம்
  15. வரமிளகாய் 6
  16. கொத்தமல்லி 2 ஸ்பூன்
  17. கறிவேப்பிலை சிறிது
  18. பூண்டு 2 பல்
  19. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நெய்யில் வதக்கி பின் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
  2. புளியை ஊற வைத்து பின் கரைத்து வடிகட்டி வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் புளிக்கரைசல் விட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  6. பின் உப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் ரசப்பொடி சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  7. பின் பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்