வீடு / சமையல் குறிப்பு / ஐந்தரிசிப் பொங்கல்

Photo of Aindarisi Pongal by Sowmya Sundar at BetterButter
329
0
0.0(0)
0

ஐந்தரிசிப் பொங்கல்

Feb-18-2019
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஐந்தரிசிப் பொங்கல் செய்முறை பற்றி

ஐந்து வகை சிறுதானிய வகைகளான வரகரிசி, பனிவரகு, சாமை, குதிரைவாலி, திணையரிசி சேர்த்து செய்த பொங்கல் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தினை கால் கப்
  2. சாமை கால் கப்
  3. வரகு கால் கப்
  4. பனிவரகு கால் கப்
  5. குதிரைவாலி கால் கப்
  6. பாசிப்பருப்பு 3டேபிள்ஸ்பூன்
  7. தண்ணீர் 5 டம்ளர்
  8. உப்பு ருசிக்கேற்ப
  9. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  11. முந்திரிப்பருப்பு 6
  12. மிளகு சீரகம் தலா ஒரு டீஸ்பூன்
  13. இஞ்சி ஒரு துண்டு
  14. கறிவேப்பிலை மல்லி சிறிதளவு
  15. மிளகு சீரகப் பொடி ஒரு டீஸ்பூன்
  16. பெருங்காயம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் ஐந்து வகை அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து களைந்து தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு மிளகு, சீரகம்,முந்திரி, கறிவேப்பிலை ,இஞ்சி தாளிக்கவும்
  3. பின் அதனுடன் பொடித்த மிளகு சீரகப் பொடி, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்
  4. வேகவைத்ததை அதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
  5. கொத்தமல்லி தழை தூவவும். சூடான பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்