வீடு / சமையல் குறிப்பு / "அரச்ச சிக்கன் கறி"

Photo of "Aracha chicken curry " by Navas Banu L at BetterButter
3
0
0.0(0)
0

"அரச்ச சிக்கன் கறி"

Feb-18-2019
Navas Banu L
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

"அரச்ச சிக்கன் கறி" செய்முறை பற்றி

" அரச்ச சிக்கன் கறி " தேவையான பொருட்கள் கோழி - அரைக்கிலோ இஞ்சி - 1 துண்டு பூண்டு - 8 அல்லி பச்சை மிளகு - 2 பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது பழுத்த தக்காளி பெரியது - 1 நறுக்கியது தேங்காய் துண்டு நறுக்கியது - அரைகப் மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண் மிளகு பொடி - 1 டேபிள் ஸ்பூண் மல்லிப்பொடி - 2 டேபிள்ஸ்பூண் சோம்பு பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூண் கரம் மஸாலாப் பொடி - 1 டீஸ்பூண் மல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவைக்கு எண்ணை - 2 டேபிள் ஸ்பூண் லெமன் ஜுஸ் - 1 டேபிள் ஸ்பூண் செய்முறை 1.கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்து லெமண் ஜுஸும் உப்பும் சேர்த்து மிக்ஸ் பண்ணி வைக்கவும். 2.மிக்ஸி உடைய. பெரிய ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேங்காய் துண்டுகள், மஞ்சள் பொடி, மிளகு பொடி, மல்லிப்பொடி, சோம்பு பொடி, எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மை போல அரைத்துக் கொள்ளவும். 3.அரைத்த மஸாலாவை கோழியில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். 4.ஒரு கடாய் அடுப்பில் வைத்து மிக்ஸ் பண்ணிய கோழியை மூடி வைத்து மூடி வேக வைக்கவும். 5.மஸாலா நன்றாக கொதித்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைக்கவும். 6.மஸாலா நன்றாக கோழியில் பிடித்து தண்ணீர் வற்றி இறுகி வரும் போது கரம் மஸாலா சேர்க்கவும். 7.எண்ணைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். 8.மல்லி இலை தூவவும். 9.அடுப்பை ஸிம்மில் வைத்து 5 நிமிடம் மூடி வைக்கவும். 10. மஸாலா நன்றாக இறுகி,மேலே எண்ணை தெளிந்து வரும்போது இறக்கவும். 11.உப்பு தேவை என்றால் சேர்த்துக் கொள்ளவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி - அரைக்கிலோ
  2. இஞ்சி - ஒரு துண்டு
  3. பூண்டு - 8 அல்லி
  4. பச்சை மிளகு - 2
  5. பெரிய வெங்காயம் நறுக்கியது - 1
  6. பெரிய தக்காளி நறுக்கியது - 1
  7. தேங்காய் துண்டு நறுக்கியது - அரை கப்
  8. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்
  9. மிளகு பொடி - 1 டேபிள்ஸ்பூண்
  10. மல்லிப்பொடி - 2 டேபிள் ஸ்பூண்
  11. சோம்பு பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூண்
  12. கரம் மஸாலாபொடி - 1 டீஸ்பூண்
  13. மல்லித்தழை - சிறிதளவு
  14. லெமன் ஜுஸ் - 1 டேபிள் ஸ்பூண்
  15. உப்பு - தேவைக்கு
  16. எண்ணை -2 டேபிள் ஸ்பூண்

வழிமுறைகள்

  1. 1. கோழியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து லெமன் ஜூஸும் உப்பும் சேர்த்து மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
  2. 2. மிக்ஸியுடைய பெரிய ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேங்காய் துண்டுகள், மஞ்சள் பொடி, மிளகு பொடி, மல்லிப்பொடி ,சோம்பு பொடி, எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மை போல அரைத்துக் கொள்ளவும்.
  3. 3.அரைத்த மஸாலாவையும்,மிக்ஸி ஜார் கழுகிய தண்ணீரையும் கோழியில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
  4. 4. ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் மிக்ஸ் பண்ணிய கோழியை ஒரு மூடி வைத்து மூடி வேக வைக்கவும். 5.மஸாலா நன்றாகக் கொதித்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைக்கவும். 6.கோழி நன்றாக வெந்து, மஸாலாவிலுள்ள தண்ணீர் எல்லாம் வற்றி,மஸாலா கோழியில் பிடித்து இறுகி வரும் போது கரம் மஸாலா சேர்த்து மிக்ஸ் பண்ணவும். 7. எண்ணையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். 8.அடுப்பை ஸிம்மில் வைத்து 5 நிமிடம் மூடி வைக்கவும். 9.உப்பு தேவை என்றால் சேர்த்துக் கொள்ளவும். 10.மஸாலா நன்றாக இறுகி, எண்ணை மேலே தெளிந்து வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்