வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை சாதம்

Photo of Betel Leaves Rice by Sowmya Sundar at BetterButter
82
0
0.0(0)
0

வெற்றிலை சாதம்

Feb-19-2019
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை சாதம் செய்முறை பற்றி

வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உதிராக வடித்த சாதம் ஒரு கப்
  2. உப்பு ருசிக்கேற்ப
  3. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  4. எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்
  5. தாளிக்க :
  6. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  7. கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன்
  8. வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன்
  9. அரைத்துக் கொள்ள:
  10. வெற்றிலை 5
  11. பூண்டு 2 பல்
  12. பச்சை மிளகாய் ஒன்று
  13. மிளகு, சீரகம் தலா அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பொடியாக நறுக்கிய வெற்றிலை மற்றும் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்
  3. பின் அடுப்பை அணைத்து வேக வைத்த சாதம் ,எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்