வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய காய்கறி கட்லெட்

Photo of Millets Vegetable Cutlet by Sowmya Sundar at BetterButter
329
1
0.0(0)
0

சிறுதானிய காய்கறி கட்லெட்

Feb-20-2019
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய காய்கறி கட்லெட் செய்முறை பற்றி

திணை, சாமை ,குதிரைவாலி போன்ற சிறுதானியங்களும், பீட்ரூட், கேரட் ,குடைமிளகாய் ,வெங்காயம் போன்ற காய்கறிகளும் சேர்த்து செய்த ப்யூஷன் கட்லெட். சிறுதானியங்கள் விரும்பாத குழந்தைகளும் இப்படி செய்வதால் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திணை 2 டேபிள்ஸ்பூன்
  2. சாமை 2 டேபிள்ஸ்பூன்
  3. குதிரைவாலி 2 டேபிள்ஸ்பூன்
  4. தண்ணீர் 1.5 கப்
  5. அவல் 1/4 கப்
  6. வெங்காயம் ஒன்று
  7. பீட்ரூட் துருவல் 1/8 கப்
  8. கேரட் துருவல் 1/8 கப்
  9. குடைமிளகாய் ஒன்று
  10. புதினா , கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
  11. பச்சை மிளகாய் ஒன்று
  12. மிளகாய் தூள் கால் டீஸ்பூன்
  13. மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  14. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  15. உப்பு ருசிக்கேற்ப
  16. எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்
  17. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் + பான் ப்ரை செய்ய சிறிதளவு

வழிமுறைகள்

  1. சிறுதானியங்களை களைந்து தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து ஆற விட்டு எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் , பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்
  3. அதனுடன் பீட்ரூட், காரட் துருவல் சேர்த்து வதக்கவும்.காய்க்கு தேவையான உப்பு, மிளகாய் தூள்,மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்
  4. சிறிது வதங்கியதும் அடுப்பை அணைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. வேக வைத்த சிறுதானியங்களுடன் காய்கறி கலவை, நறுக்கிய கொத்தமல்லி இலை,புதினா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  6. மாவை உருண்டைகளாக உருட்டி சிறிது தடிமனாக தட்டி கொள்ளவும்
  7. அவலை மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும் .அதில் கட்லெட்டை நன்றாக தோய்த்துக் கொள்ளவும்.
  8. இதேபோல் அனைத்தையும் செய்து கொள்ளவும்
  9. பானில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கட்லெட்டுகளை அடுக்கி மிதமான தீயில் ப்ரை செய்து கொள்ளவும்
  10. அதிக எண்ணெயில்லாத, ஆரோக்கியமான சிறு தானிய காய்கறி கட்லெட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்