வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken biryani by kifa aboo at BetterButter
426
1
0.0(0)
0

சிக்கன் பிரியாணி

Feb-20-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

சுவையான பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பிரியாணி அரிசி இரண்டு கப்
  2. நெய்
  3. பட்டை ஏலம் பிரிஞ்சி இலை2
  4. சிக்கன் ஒரு கிலோ
  5. தயிர் அரை கப்
  6. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  8. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  10. தக்காளி 3
  11. வெங்காயம் ஐந்த
  12. பச்சை மிளகாய் 3
  13. புதினா கொத்தமல்லி அரை கட்டு
  14. எலுமிச்சை அரை

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை நன்கு கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் அரைக்க கூடிய பொருட்கள்
  3. புதினா கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் உப்பு இஞ்சி பூண்டு விழுது தயிர் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  4. பிறகு அதை நன்கு கழுவி வைத்துள்ள சிக்கனை போட்டு ஊறவைக்கவேண்டும் 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  5. ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு நீளநீளமாக கட் பண்ணினா ஆனியன் போட்டு நன்கு வதக்கி பிரவுன் கலர் வரும் வரை வதக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  6. மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அரிசியை போட்டு அதில் புதினா போட்டு நன்கு கொதிக்க வைத்து முக்கால் பதம் வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  7. இப்போது மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் பிரிஞ்சி இலை போட்டு நன்கு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி
  8. பிறகு ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு வதக்க வேண்டும்
  9. சிக்கன் பாதி வெந்தவுடன் வேக வைத்து வைத்துள்ள சாதத்தை அதன் மேல் போட்டு 15 நிமிடம் தம் போடவேண்டும்
  10. பிறகு மிக்ஸ் பண்ணி பரிமாறவும் இப்போது சுவையான சிக்கன் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்