வீடு / சமையல் குறிப்பு / " முட்டை வெள்ளைக்கரு றோஸ்ட் "
" முட்டை வெள்ளைக் கரு றோஸ்ட் " தேவையான பொருட்கள் முட்டை வெள்ளைக்கரு ( 8 முட்டையின் வெள்ளைக்கரு) வெங்காயம் - 1 நறுக்கியது தக்காளி 1 நறுக்கியது பச்சை மிளகு - 1 நறுக்கியது மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண் மிளகு பொடி - 1 டீஸ்பூண் சோம்பு பொடி - 1 1/2 டீஸ்பூண் பெப்பர் பொடி - 1 டீஸ்பூண் கரம் மஸாலா பொடி - 1 டீஸ்பூண் இஞ்சி விழுது - 1 டீஸ்பூண் பூண்டு விழுது - 1 டீஸ்பூண் மல்லி,புதினா நறுக்கியது - கொஞ்சம் உப்பு - தேவைக்கு தாளிக்க எண்ணை - 3 டேபிள் ஸ்பூண் செய்முறை 1. முட்டையை அவித்து மஞ்சள் கருவை நீக்கி விட்டு வெள்ளைக் கருவை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.கடாய் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும். 3. அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகு சேர்த்து வதக்கவும். 4. உப்பு சேர்த்து வதக்கவும். 5.தக்காளி சேர்த்து வதக்கவும். 6.மல்லி,புதினா சேர்த்து வதக்கவும். 7.மஞ்சள் பொடி, மிளகு பொடி, சோம்பு பொடி, பெப்பர் பொடி, கரம் மஸாலா பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். 8.கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 9.தண்ணீர் நன்றாகக் கொதித்து வற்றி மஸாலா இறுகி வரும் போது முட்டை வெள்ளைக் கருவைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க