வீடு / சமையல் குறிப்பு / கம்பு மசாலா புலாவ்

Photo of Bajra masala pulav by Sumaiya Arafath at BetterButter
5
2
0.0(0)
0

கம்பு மசாலா புலாவ்

Feb-23-2019
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கம்பு மசாலா புலாவ் செய்முறை பற்றி

கம்பு சிறுதானிய வகையை சார்ந்தாகும்.இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளது.உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை சீராக்கும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • ஃப்யூஷன்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. கம்பு(கழுவி ,இரவு முழுதும் ஊறவைத்தது)-1கப்
 2. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1
 3. இஞ்சி பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
 4. பூண்டு பொடியாக நறுக்கியது 1 தே.க
 5. இநதுப்பு தேவைக்கு
 6. பச்சை மிளகாய் நறுக்கியது 1
 7. கேரட், பீன்ஸ், மஞ்சள் குடைமிளகாய்,பட்டாணி- தலா 1/2 கப்
 8. சீரகம் 1/2+1/4 தே.க
 9. மஞ்சள் தூள் 1+1/2 தே.க
 10. மிளகாய்த்தூள் 1 தே.க
 11. கரம் மசாலா தூள் 1 தே.க
 12. மல்லி இலை 1/4 கப் நறுக்கியது
 13. தண்ணீர் 5 கப்
 14. நெய் 2 மே.க
 15. தே.எண்ணை 1 தே.க

வழிமுறைகள்

 1. கம்பை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும்
 2. குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு 1/2 தே. க சீரகம் தாளிக்கவும்
 3. ஊறவைத்து வடிகட்டிய கம்பை சேர்க்கவும்
 4. சிறிது வதக்கி அதனுடன் 1 தே.க மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்
 5. 8 விசில் வரை வேக வைக்கவும்
 6. வேகவைத்த கம்பு இவ்வாறிருக்கும்
 7. வாணலில் நெய் விட்டு 1/4 தே.க சீரகம் தாளித்து இஞ்சி, பூண்டு,ப.மிளகாய் தாளிக்கவும்
 8. பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
 9. காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
 10. 1/2 தே.க மஞ்சள் ,உப்பு மற்றும் மசாலா தூள்களை சேர்க்கவும்
 11. சிறிது வதங்கியதும் வேகவைத்த கம்பை சேர்க்கவும்
 12. 3 கப் தண்ணீர் ஊற்றி வத்த வைக்கவும்
 13. மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்