வீடு / சமையல் குறிப்பு / டேட்ஸ் ஸ்டஃப்டு பணியாரம்

Photo of Dates Stuffed Paniyaram by Sowmya Sundar at BetterButter
313
1
0.0(0)
0

டேட்ஸ் ஸ்டஃப்டு பணியாரம்

Feb-23-2019
Sowmya Sundar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டேட்ஸ் ஸ்டஃப்டு பணியாரம் செய்முறை பற்றி

பணியார மாவில் பேரிச்சம்பழம் அடைத்து செய்த இனிப்பு பணியாரம்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி ஒன்றரை கப்
  2. புழுங்கலரிசி ஒன்றரை கப்
  3. உளுந்து கால் கப்
  4. வெந்தயம் ஒரு டீஸ்பூன்
  5. பேரிச்சம்பழம் பொடியாக நறுக்கியது கால் கப்
  6. வெல்லம் ஒரு கப்
  7. ஏலக்காய் பொடி அரை டீஸ்பூன்
  8. எண்ணெய் கால் கப்

வழிமுறைகள்

  1. பச்சரிசி, புழுங்கல் அரிசி ,உளுந்து வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊற வைத்ததை மிக்ஸியில் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு லேசாக கொதிக்க வைத்து வடிகட்டி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.
  4. பணியாரச் சட்டியில் எண்ணெய் தடவி மாவை பாதியளவு விடவும். பின் அதன் மேல் பேரிச்சம் பழத்தை வைத்து மேலும் சிறிது மாவை விட்டு மூடவும்
  5. அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். பொன்னிறமானதும் திருப்பி போட்டு வேக வைக்கவும்
  6. பேரிச்சம்பழம் அடைத்த பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்