வீடு / சமையல் குறிப்பு / வெஜ்டபில்ஸ் சோயா கிரேவி

Photo of Vegetables and soya grevi by sudha rani at BetterButter
261
0
0.0(0)
0

வெஜ்டபில்ஸ் சோயா கிரேவி

Feb-23-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

வெஜ்டபில்ஸ் சோயா கிரேவி செய்முறை பற்றி

நார்சத்து புரதச்சத்து நிறைந்த ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கேரட் 1/4 கிலோ
  2. பீன்ஸ் 1/4 கிலோ
  3. பட்டாணி 1/4 கிலோ
  4. சோயா 1/2 கிலோ
  5. வெங்காயம் 2
  6. குழம்பு மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி தழை சிறிது
  13. மசாலா அரைக்க:
  14. சின்ன வெங்காயம் 15
  15. பட்டை 2
  16. கிராம்பு 2
  17. மிளகு 1 ஸ்பூன்
  18. பிரியாணி இலை 2
  19. ஏலக்காய் 2
  20. சீரகம் 1 ஸ்பூன்
  21. கொத்தமல்லி விதை 2 ஸ்பூன்
  22. தேங்காய் துருவல் 1/4 கப்
  23. எண்ணெய் சிறிது
  24. வரமிளகாய் 4
  25. கறிவேப்பிலை சிறிது
  26. பூண்டு 4 பல்
  27. இஞ்சி 1 துண்டு
  28. தக்காளி 8

வழிமுறைகள்

  1. மசாலா அரைக்க:
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை ,கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ,சீரகம் ,மிளகு, மல்லி, வரமிளகாய், சோம்பு சேர்த்து வெடிக்க விட்டு எடுக்கவும்
  3. பின் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை ,இஞ்சி ,பூண்டு, தக்காளி, ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
  4. பின் ஆறவைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
  5. கிரேவி:
  6. பட்டாணி ஐ முதல் நாள் இரவே ஊற வைக்கவும்
  7. சோயா பீன்ஸ் ஐ சுமார் ஒரு மணி நேரம் வரை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து நன்கு தண்ணீர் பிழிந்து எடுக்கவும்
  8. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  9. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  10. பின் நறுக்கிய கேரட் பீன்ஸ் பட்டாணி மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  11. பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  12. பின் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  13. பின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்