வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் ஃப்ரை
"Brinjal fry " (கத்திரிக்காய் ஃப்ரை) தேவையான பொருட்கள் கத்தரிக்காய் - 5 மஞ்சள் பொடி - 1 டீஸ்பூண் மிளகு பொடி -1 டீஸ்பூண் கரம் மஸாலா - 1 டீஸ்பூண் உப்பு - தேவைக்கு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூண் செய்முறை 1.கத்தரிக்காயை நீளமாக வெட்டி தண்ணீரில் கழுவி சுத்தமாக்கி வைக்கவும். 2.நான்ஸ்டிக் ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். 3. எண்ணெய் சூடானதும் கத்தரிக்காயை சேர்த்து கிளறவும். 4.இதனுடன் மஞ்சள் பொடி, மிளகு பொடி,கரம் மஸாலா பொடி, உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி கை விடாமல் வதக்கவும். 5. தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து 10 முதல் 15 நிமிடம் வேக விடவும். 6. அடி பிடித்து விடாமல் நன்றாக வதக்கி ஃப்ரை ஆனதும் இறக்கவும். 7. சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ் இது.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க