வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு இலை கொழுக்கட்டை

Photo of Banana Stem Ilai Kozhukattai by Sowmya Sundar at BetterButter
230
1
0.0(0)
0

வாழைத்தண்டு இலை கொழுக்கட்டை

Feb-25-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு இலை கொழுக்கட்டை செய்முறை பற்றி

வாழைத்தண்டு பூரணம் செய்து அதை வாழையிலையில் பொதிந்து வேகவைக்கும் ஒரு வித்யாசமான முயற்சியில் செய்த சத்தான கொழுக்கட்டை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூரணம் செய்ய:
  2. பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப்
  3. உப்பு ருசிக்கேற்ப
  4. தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  5. பச்சைமிளகாய்-2
  6. சீரகம் ஒரு டீஸ்பூன்
  7. இளம் கறிவேப்பிலை சிறிது
  8. தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
  9. கடுகு , உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்
  10. வாழை இலை -2
  11. மேல் மாவிற்கு :
  12. பச்சரிசி மாவு 1 கப்
  13. தண்ணீர் ஒன்றேகால் கப்
  14. உப்பு ஒரு சிட்டிகை
  15. நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்து வடித்துக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த மசாலா மற்றும் வாழைத்தண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பூரணம் தயார்.
  4. மேல் மாவிற்கு கொதிக்கும் வெந்நீரில் உப்பு, எண்ணெய் சேர்த்து பச்சரிசி மாவை கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. தேவையான அளவு வாழை இலைகளை நீளவாக்கில் நறுக்கி வெந்நீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்
  6. வாழை இலையில் ஒரு உருண்டை மேல் மாவை தட்டி அதன் ஒரு பக்கம் ஒரு டீஸ்பூன் அளவு பூரணம் வைத்து கொள்ளவும்
  7. பின் அதை சரிபாதியாக மடக்கவும். இப்படி அனைத்தையும் செய்து கொண்டு ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து கொள்ளவும்
  8. வாழையிலை மணத்துடன் வாழைத்தண்டு இலை கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்