வீடு / சமையல் குறிப்பு / ஸ்டீம்ட் எக் மசாலா கேக்

Photo of Steamed Egg masala cake by Nazeema Banu at BetterButter
13
0
0.0(0)
0

ஸ்டீம்ட் எக் மசாலா கேக்

Feb-25-2019
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டீம்ட் எக் மசாலா கேக் செய்முறை பற்றி

ஆம்லேட் சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கும் டயட்டில் இருப்பவர்களுக்கும் தேவையான ஆரோக்ய கேக்.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ஸ்டீமிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. முட்டை 6
 2. பெ.வெங்காயம் 1
 3. தக்காளி 1
 4. ப.மிளகாய் 2
 5. உப்பு தே.அளவு
 6. மி.தூள் ஒரு ஸ்பூன்
 7. பால் கால் கப்

வழிமுறைகள்

 1. வெங்காயம்.தக்காளி.மற்றும் ப.மிளகாயை பொடியாக வெட்டி வைக்கவும்
 2. முட்டைகளை அடித்துக்கலக்கி வைக்கவும்.
 3. வெட்டிய வெங்காயம்.தக்காளி.ப.மிளகாயை ஒரு ஸ்பூன் எண்ணெயில் இலேசாக வதக்கவும்.
 4. அதில் தே.அளவு உப்பு.மி.தூள் சேர்க்கவும்
 5. வதங்கிய கலவையை முட்டைக்கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
 6. அத்துடன் பாலை சேர்த்து கலக்கவும்.
 7. இந்தக் கலவையை ஒரு சில்வர் பவுலில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் வைத்து வேக வைக்கவும்.
 8. இட்லி பாத்திரத்தை மூடி வைத்து மிதமான தீயில் இருபது நிமிடங்கள் வரை வேக விடவும்.
 9. அவ்வப்போது இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி வற்றாமல் பார்த்துக் கொள்ளவும்.
 10. நடுவில் ஒரு குச்சியை விட்டு வெந்ததா எனப் பார்த்து ஒரு தட்டில் கவிழ்த்து துண்டுகள் போடவும்.
 11. சுவையான எண்ணெய் இல்லாத ஸ்டீம்ட் எக் ஆம்லெட் ரெடி.
 12. ஆரோக்யமான ஆம்லெட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்