வீடு / சமையல் குறிப்பு / தென்தமிழகத்தின் ஆரோக்கியமான பாரம்பரியமிக்க உணவுகள்

Photo of Authentic South Indian Healthy Recipes by Hameed Nooh at BetterButter
3
1
0.0(0)
0

தென்தமிழகத்தின் ஆரோக்கியமான பாரம்பரியமிக்க உணவுகள்

Feb-26-2019
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தென்தமிழகத்தின் ஆரோக்கியமான பாரம்பரியமிக்க உணவுகள் செய்முறை பற்றி

பாரம்பரியமிக்க தமிழக உணவுகள் ஆரோக்கியமானவை. பீட்சா பர்கர் என்று துரித உணவுகளின் கேடுகள் அதிகரித்துவிட்ட காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் மிகவும் அவசியமானது. நமது மூதாதையர்கள் நமக்கு காட்டித்தந்த உணவுகளை உண்டாலே நோய்களை விரண்டோட செய்யலாம். சுவையான உளுந்து வடை அதற்கு ஏற்ற சட்னி சத்தான பருத்திப்பால் குளிர்ச்சியான நீர் மோர் மற்றும் அருமையான இளநீர் பாயாசம்ஆகியவற்றை மண்சட்டியில் மண் மணம் மாறாமல் வாழை இலையோடு பரிமாறி இன்பம் காண்போம்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • சிம்மெரிங்
 • ப்லெண்டிங்
 • பாய்ளிங்
 • சில்லிங்
 • ஃபிரையிங்
 • ஸாட்டிங்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. மெதுவடை ( உளுந்து வடை ) :
 2. உளுந்து - 1/4 கிலோ
 3. பச்சை மிளகாய் - 2
 4. வெங்காயம் - 2 ( நறுக்கியது )
 5. கறிவேப்பிலை - 6 இலை
 6. இஞ்சி - சிறுதுண்டு
 7. எண்ணெய் - பொறிப்பதற்கு
 8. உப்பு - சுவைக்கேற்ப
 9. தேங்காய் பூண்டு சட்னி :
 10. தேங்காய் – ½ மூடி
 11. பொரிகடலை – ஒரு கைபிடி 
 12. பச்சை மிளகாய் – ஒன்று
 13. இஞ்சி – சிறிய அளவு
 14. வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் 
 15. உப்பு – தேவையான அளவு
 16. சின்ன வெங்காயம் – 2
 17. நல்ல எண்ணெய் – 2 தேக்கரண்டி
 18. மிளகாய் வற்றல் ‍ – 1 
 19. கறிவேப்பிலை – இரண்டு கீற்று
 20. உளுந்து - 1 தேக்கரண்டி
 21. கடுகு – ½ தேக்கரண்டி
 22. இளநீர் பாயாசம் :
 23. இளநீர் - 1/2 லிட்டர்
 24. இளநீர் வழுக்கை - 1 கப்
 25. சேமியா - 100 கிராம்
 26. கன்டன்ஸ்டு மில்க் - 1/2 கப்
 27. பால் - 2 கப்
 28. முந்திரி - 25 கிராம்
 29. ஏலக்காய் தூள் - 2 தேக்கரண்டி
 30. பருத்திப்பால்
 31. பருத்திவிதை - 50 கிராம்
 32. கருப்பட்டி-100 கிராம்
 33. தேங்காய் பால்- அரைமூடி
 34. சுக்கு-சிறிய துண்டு
 35. அரிசிமாவு- 2 மேசைக்கரண்டி
 36. ஏலக்காய்-2
 37. நீர் (மசாலா) மோர் :
 38. தயிர் - 3 கப்
 39. தண்ணீர் - 3 கப்
 40. உப்பு - தேவையான அளவு
 41. கறிவேப்பிலை - ஒரு கீற்று
 42. பச்சை மிளகாய் - 2
 43. இஞ்சி - சிறிய துண்டு
 44. எண்ணெய் - 2 தேக்கரண்டி
 45. கடுகு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. மெது வடை : உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
 2. வெங்காயம், கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி இஞ்சியையும் தோல் நீக்கி பொடிதாக நறுக்கவும்.
 3. ஊறிய உளுந்தை சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து  பச்சை மிளகாய்,இஞ்சி, உப்பு சேர்க்கவும்.
 4. அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிரட்டவும்.
 5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு நடுவில் ஓட்டை போட்டு எண்ணெய்யில் பொறித்தெடுக்கவும்.
 6. தேங்காய் பூண்டு சட்னி : முதலில் தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
 7. இஞ்சி பூண்டு மற்றும் சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
 8. முதலில் மிக்ஸியில் தேங்காய் துண்டுகளை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
 9. தேங்காய் பூவுடன் பொரிகடலை, இஞ்சி துண்டுகள், வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய், தேவையான உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
 10. பின் அரைத்த கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து வைக்கவும்.  
 11. பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
 12. கடுகு வெடித்ததும் தேங்காய் கலவையுடன் தாளிப்பை சேர்த்து வடையுடன் பரிமாறவும்.
 13. இளநீர் பாயாசம் : பாதி அளவு இளநீர் வழுக்கையில் சிறிதளவு இளநீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.
 14. மீதமுள்ள இளநீர் வழுக்கையை மெல்லிதாக நறுக்கி வைக்கவும்.
 15. ஒரு பாத்திரத்தில் கன்டன்ஸ்டு மில்கை ஊற்றி பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் சேமியா சேர்க்கவும்.
 16. பால் பாதியாக வரும் வரை கிளறி நறுக்கிய இளநீர் வழுக்கை, இளநீர், ஏலக்காய் தூள்,வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
 17. குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் ரோஜா இதழ் தூவி அலங்கரித்து சாப்பிடவும்.
 18. பருத்திப்பால் : பருத்திவிதையை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுக்கவும்.
 19. கருப்பட்டியை இடித்து சிறிதளவு  தண்ணீரில் காய்ச்சி வடிகட்டவும்.
 20. பருத்திவிதைப்பாலை அதை போன்று இருமடங்கு தண்ணீர் ஊற்றி காய்ச்சி ஒரு கொதி வந்ததும் வடிகட்டிய கருப்பட்டி மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றி காய்ச்சவும்
 21. பால் கொதிக்கும் போது அரிசி மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
 22. இறுதியாக ஏலக்காய் சுக்கை பொடியாக்கி சேர்த்து சூடாக பரிமாறவும்.
 23. நீர் (மசாலா) மோர் : தயிரை தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க கடைந்து எடுக்கவும்.
 24. பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை அரைத்துக் கொள்ளவும்.
 25. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
 26. அரைத்ததையும் தாளிப்பையும் மோரில் சேர்த்து கொத்தமல்லி இலையையும் தூவி குளிரூட்டி பருகவும்.
 27. தென்தமிழகத்தின் பாரம்பரியமிக்க ஆரோக்கியமான உணவுகள் இப்பொழுது தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்