வீடு / சமையல் குறிப்பு / பச்சை பப்பாளி மஸாலா றோஸ்ட்

Photo of Raw papaya masala roast ( chicken style) by Navas Banu L at BetterButter
2
0
0.0(0)
0

பச்சை பப்பாளி மஸாலா றோஸ்ட்

Feb-26-2019
Navas Banu L
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சை பப்பாளி மஸாலா றோஸ்ட் செய்முறை பற்றி

" பச்சைப் பப்பாளி மஸாலா றோஸ்ட் " தேவையான பொருட்கள் பச்சை பப்பாளி -1 ( தோல் சீவி சுத்தமாக்கி துண்டுகளாக வெட்டியது) சின்ன உள்ளி - முக்கால் கப் இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூண் பூண்டு விழுது - 1 டீஸ்பூண் தேங்காய் துண்டுகள் - 1/2 கப் மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண் மிளகு பொடி - 1 டேபிள் ஸ்பூண் மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூண் கரம் மஸாலா - 1 டீஸ்பூண் பெப்பர் பொடி - 1 டீஸ்பூண் பட்டை - 1 துண்டு வற்றல் மிளகு - 3 கறிவேப்பிலை - 1 தண்டு எண்ணை - 3 டேபிள் ஸ்பூண் உப்பு தேவைக்கு செய்முறை 1. வெட்டிய பப்பாளி துண்டுகளை இட்டிலி குட்டுவத்தில் வைத்து ஆவியில் அவித்து வைத்துக் கொள்ளவும். 2. ஒரு வாணலி அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும். 3. எண்ணை சூடானதும் அதில் கடுகு, வற்றல் மிளகு, பட்டை போட்டு தாளிக்கவும். 4.எல்லாம் சிவந்து வரும்போது தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். 5. சின்ன உள்ளி சேர்த்து நன்றாக வதக்கவும். 6.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மணம் மாறும் வரை வதக்கவும். 7. பச்சை மணம் மாறிய பிறகு மஞ்சள் பொடி, கரம் மஸாலா பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். 8.தீயை லோ ஃப்ளேமில் வைக்கவும். 9.இப்போது மிளகு பொடி, மல்லிப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். 10. பெப்பர் பொடி சேர்த்து வதக்கவும். 11.உப்பு சேர்க்கவும். 12.இப்போது ஆவியில் அவித்து வைத்திருக்கும் பப்பாளி சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். 13.தேவைக்கு தண்ணீர் சேர்த்து எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணி கொதிக்க விடவும். 14.ஸெமி கிரேவி பருவத்தில் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • நார்த் இந்தியன்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. பச்சை பப்பாளி - 1
 2. சின்ன உள்ளி - முக்கால் கப்
 3. தேங்காய் துண்டுகள் - அரை கப்
 4. இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூண்
 5. பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூண்
 6. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்
 7. மிளகு பொடி - 1 டேபிள் ஸ்பூண்
 8. மல்லிப்பொடி - 1 டேபிள் ஸ்பூண்
 9. கரம் மஸாலா - 1 டீஸ்பூண்
 10. பெப்பர் பொடி - 1 டீஸ்பூண்
 11. கறிவேப்பிலை - 1 தண்டு
 12. பட்டை -1 துண்டு
 13. வற்றல் மிளகு - 3
 14. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூண்
 15. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

 1. பப்பாளியை தோல் நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 2. வெட்டிய பப்பாளியை இட்டிலி குட்டுவத்தில் வைத்து ஆவியில் அவித்து வைத்துக்கொள்ளவும்
 3. ஒரு வாணலி அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும்.
 4. எண்ணை சூடானதும் கடுகு, வற்றல் மிளகு, பட்டை போட்டு தாளிக்கவும்.
 5. எல்லாம் சிவந்து வரும் போது தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
 6. சின்ன உள்ளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 7. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மணம் மாறும் வரை வதக்கவும்.
 8. பச்சை மணம் மாறிய பிறகு மஞ்சள் பொடி, கரம் மஸாலா பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 9. தீயை லோ ஃப்ளேமில் வைக்கவும்.
 10. இப்போது மிளகு பொடி, மல்லிப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 11. பெப்பர் பொடி சேர்த்து வதக்கவும்.
 12. உப்பு சேர்த்து வதக்கவும்.
 13. இப்போது ஆவியில் அவித்து வைத்திருக்கும் பப்பாளியை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
 14. தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
 15. ஸெமி கிரேவி பருவத்தில் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்