வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய கொண்டைக்கடலை சாதம்

Photo of Sprouted Channa Rice by Sowmya Sundar at BetterButter
463
1
0.0(0)
0

முளைகட்டிய கொண்டைக்கடலை சாதம்

Feb-26-2019
Sowmya Sundar
1920 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய கொண்டைக்கடலை சாதம் செய்முறை பற்றி

முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிராக வடித்த சாதம் 2 கப்
  2. கொண்டைக்கடலை ஒரு கப்
  3. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
  4. கடுகு ,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
  5. வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன்
  6. முந்திரிப் பருப்பு
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. பச்சைமிளகாய்-2
  9. இஞ்சி ஒரு துண்டு
  10. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்
  13. மல்லித்தழை சிறிதளவு
  14. வறுத்து பொடி செய்ய:
  15. கடலைப்பருப்பு ஒரு டேபிள்
  16. கொத்தமல்லி விதை ஒரு டேபிள்ஸ்பூன்
  17. மிளகாய்வற்றல் 2
  18. சீரகம் கால் டீஸ்பூன்
  19. பெருங்காயம் ஒரு துண்டு
  20. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து பின் தண்ணீர் வடித்து ஒரு நாள் வைத்து முளை கட்டி கொள்ளவும். பின் குக்கரில் உப்பு சேர்த்து மலர வேக வைத்து கொள்ளவும்.
  2. வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை ,முந்திரி, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்
  4. உதிராக வடித்த சாதம், வேகவைத்த கொண்டைக்கடலை ,உப்பு மற்றும் அரைத்த பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
  5. எலுமிச்சைச் சாறு கலந்து கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்